Friday, March 29, 2013

தமிழீழம் போருக்கு பின்புலம் தமிழகம்


கழிந்த வாரம் இறுதியில் ஊட்டியில் மிக ரம்மியமான இயற்கை சூழலில்,இதமான குளிரில் மூன்று தினங்கள் கழிக்க திட்டமிட்டு சென்றேன். தங்கியிருந்த கிளாஸ் ஹவுஸ்-ன் திறந்து வைத்திருந்த சன்னல் வழியே பனிதழுவிய காற்று உடல்முழுவதும் வருடி குளிர்வித்துக் கொண்டுருந்தது.

இப்போதெல்லாம் குமரியில் வெயிலின் தாக்கம் கழிந்த பத்து வருடங்களாக அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது.வனப்பகுதிகளெல்லாம் அழித்து பணப்பயிர் ரப்பர் மரங்களாகிப் போனது தான் அதிகபடியான வெயிலும் வெப்பத்திற்கு காரணம்.மலைப்பகுதியில் ஆரம்பித்த இந்த ரப்பர் தோட்டங்கள் இப்போது நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வரையிலும் வளர்க்க ஆரம்பித்தாகி விட்டது.பண ஆசைபிடித்த மக்கள் புளியையும், பலாவையும்,மாவையும் அழித்து ரப்பர் மரங்களில் பால்வடித்து பணம் சேர்க்க ஆசைபடுகின்றனர்.தாங்களது எதிர்கால சந்ததி முக்கனிகளை தின்று ருசிப்பதற்கான வாய்ப்பையிழந்து அச்சிடப்பட்ட காகிதங்களில் மட்டுமே முக்கனிகளை காணமுடியும் என்பதனையும் உணர மறந்து மரங்களை வெட்டி சரிக்கின்றனர்.

காலை உணவினை முடித்து விட்டு புத்தக அலமாரியினை நோட்டம் விட்டேன் தடித்த தடிமனான ஐயா பழநெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” சிக்கியது. மூன்று நாட்களுக்குள் முடிந்தவற்றை படித்துவிடுவோம் என உள்ளே புகலானேன். வன்னிக்காட்டில் ஆரம்பித்து படையணிகள் எங்கெல்லாம் பயணித்ததோ அங்கொல்லாம் வலம் வரலானேன் ஊட்டியின் குளிரையும் மீறி என்னுள்ளே உஸ்ணம் பரவிக்கொண்டிருந்தது.

தமிழீழம் போருக்கு பின்புலம் தமிழகம்-

சுமார் ஆறரைக்கோடி தமிழ் மக்களைக் கொண்ட தமிழகத்திற்கு நாற்பத்தைந்து இலட்சம் ஈழதமிழர்களுக்கு துணை புரியும் வலிமையுண்டு அது கடமையுங்கூட ஆகும்.

ஈழதமிழர்கள் போராட்டம் இலங்கையின் உள் நாட்டு பிரச்சனையாகும்.அது அன்னிய நாட்டு பிரச்சனை என சொல்பவர்களே உலக வரலாற்றினையும் இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாற்றினையும் அறியாதவர்கள் ஆவார்கள்.
1936ம் வருடம் ஐரோப்பியா ஸ்பெயின் நாட்டில் ஆளும் சர்வாதிகாரி பிராங்கோ விற்கும் மக்களுக்கும் பெரும் பிரச்சனை மக்கள் அனைவரும் பாசிஸ்ட்டு பிராங்கோவை எதிர்த்து மக்கள் புரட்சி நடை பெற்று வந்த காலம் அது. அவருக்கு துணையாக ஜெர்மனி ஹிட்டலரும்,இத்தாலி முசோலினியும்.
இங்கே இந்தியாவில் சுதந்திர வேட்கையும் போராட்டமும் வலுத்த காலம். இந்திய தேசிய காங்கிரஸ் தனது மாநாட்டில் ஐரோப்பிய ஸ்பெயின் மக்கள் புரட்சிக்கு உதவுவதெனவும், அதற்கான மாணவர் படையினை உருவாக்கி அங்கு சென்று போராடுவதெனவும் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் தீர்மானம் இயற்றுகிறது.
ஜவஹர்லால் நேருவின் மூலம் அந்த மாணவர்படை லண்டனில் வைத்து பெரோஸ்காந்தி தலைமையில் உருவாகப்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் அந்த மாணவர் படை ஸ்பெயின் சென்று மக்கள் புரட்சியோடு இணைந்து போராடுகிறது அது மட்டுமல்லாமல் ஜவஹர்லால் நேருவும் அங்கு நடைபெற்ற போராட்ட கூட்டங்களிலும் உறையாற்றினார்.
எந்த தொப்புள் கொடி உறவும் இல்லாத ஸ்பெயின்  மக்கள் புரட்சிக்கு படை அமைத்து துணை சென்றது இந்திய தேசிய காங்கிரஸ்.

தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிரான தனது போக்கை இந்திய அரசு மாற்றிக் கொள்ளவிட்டால் ?

இன்று தமிழகம் முழுதும் மாணவர்களிடையே வியாபித்து வளர்ந்து வரும் தமிழீழ விடுதலை வேட்கையினை யாரலும் தடுக்க இயலாது.
www.jawaharclicks@facebook.com

சிங்கள பேரினவாதிகளின் தமிழீழ படுகொலைக்கு டில்லி பின்புலமானால்,தமிழீழ் விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழகம் பின்புலமாவது இயற்கை வகுத்த நியதியாகும் இது காலத்தின் கட்டாயமாகும்.
(பக்கம் -510)

Wednesday, February 1, 2012

கட்டுரை

முகநூல் மூலம் முகம் பார்த்தோம் .....குமரி முனையில்

காலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து பிளைன் டீ வித் முட்டை புல்சேயும் சாப்பிட்டு காரை கிளப்பி கலக்ட்ரேட் ஜங்சன் வந்து சேர்ந்தேன். நண்பர் சிந்து குமாருக்காக காத்திருந்தேன்.5.30 மணிக்கு சிந்துவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது நான் நண்பர் மெர்வினை பார்க்க டவர் ஜங்சன் வந்துவிட்டேன் நீங்க எங்க இருக்கீங்க என கேட்டார். எனக்கு உள்ளுக்குள்ளே கோபம் அவர்தான் முந்தின நாள் என்னை இங்கே சந்திப்போம் என பிக்ஸ் செய்தார் இப்போது ஒன்றும் தெரியாது போல.... எங்க இருக்கீங்க என வினவுகிறார்...

தலைவா நான் உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன்....

பாஸ் நீங்க பிளீஸ் டவருக்கு வாங்க.....

காரை டவரை நோக்கி விட்டேன் மீண்டும் தொலைபேசி அழைத்தது அழைப்பில் காத்திருந்தது நண்பர் மெர்வின். ஹலோ பாஸ் நீங்களும் சிந்துவும் கன்னியாகுமரிக்கு போய் விடுங்கள் ரயிலில் லெட்சுமணன் ஐயர் வருகிறார் அவரை பிக்கப் செய்யுங்கள் என்று கட்டளையிட்டார்.

அந்த கும்மிருட்டில் டவரில் அண்ணாச்சியின் பேப்பர் கடையின் வெளியில் சிந்துவை கண்டு பிடித்து காரில் முன்பக்கம் ஏற்றி கொண்டு குமரி முனை நோக்கி பயணப்பட்டோம். எனக்கு சிந்துவிடம் இருந்த கோபத்தை முகத்தில் காண்பிக்காத படி புன்முறுவல் பூத்தவாரு எனது முகத்தை மாற்றிக் கொண்டேன். காலையிலே கச்சேரியை ஆரம்பிக்க கூடாது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மனதை சமாதனம் செய்து கொண்டேன். வாடைகாற்று குளிர்ந்து போய் காது மடல்களை வருடியது. குமரி FM ல் சீர்காழி சிதம்பரம் கணீர்குரலில் உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும் என பாடிக்கொண்டிருந்தது. சிந்து தன் கையிலிருந்த குமுதம் ரிப்போட்டர், மாத்துருபூமி மற்றும் தினதந்தியை காரின் டாஸ்போர்டில் போட்டிருந்தார்.

பாஸ் லெட்சுமணன் ஐயரை நீங்க பார்த்திருக்கீங்களா என்றார்? இல்லை என்றேன் இரண்டு பேருமே அவரை பார்த்ததில்லை பின்பு எப்படியாக்கும் கண்டுபிடிக்க போகிறோம் என்ற வினாவோடு குமரி இரயிவே ஸ்டேசனில் காத்திருந்தோம்.

6.50 க்கு வரவேண்டிய கன்னியாகுமரி இரயில் அன்று காலதாமதமாக வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தை ரெட் அலர்ட்என்ற கவர் ஸ்டோரி வெளியிட்டுருந்த மாத்துருபூமியின் கூடன்குளம் பற்றிய செய்தியும் அதில் வெளியான படங்களும் எங்களை ஆட்கொண்டது.

சரியாக 7.20 க்கு கன்னியாகுமரி இரயில் வந்து சேர்ந்தது பிளாட்ஃபாம் டிக்கெட்டை எடுத்துக் கொண்டு இருவருமாக லெட்சுமணன் ஐயரை தேடிக்கொண்டு ஒவொரு முகங்களாக பார்த்துக்கொண்டே பிளாட்ஃபாமில் வரும் பயணிகளின் எதிர் நோக்கி சென்றோம். சிந்து சொல்வார் எனது முக நூலில் புரைபலில் எனது படம் இருக்கிறது எனவே அவர் எண்னை அடையாளம் கண்டு கொள்வார் என. எங்கள் இருவரின் கணிப்பு அவர் வயதான தோற்றத்தில் 55 தாண்டிய நபராக இருப்பார் என தேடினோம். அவரக இருக்குமோ இல்லை இவராக இருக்குமோ என ஒவ்வொரு முகங்களாக உற்று பார்த்துக்கொண்டே நடைமேடையில் விரைந்தோம். நண்பர் மெர்வின் தகவல் தந்தார் அவர் 3rd AC யில் வருகிறார் அவரது செல்ல பேசியின் நம்பரையும் தந்திருந்தார் அனால் அது ஸுவிச் ஆப் செய்யப்பட்டிருந்தது. காரணம் அவரது செல்ல பேசி எண்னை சிந்து குறித்துக் கொள்ளும் போது தவராக குறித்து கொண்டார் என்பது பின்பு தெரிந்து கொண்டோம்.

நடைமேடையில் நாங்கள் செல்ல எங்களை கடந்து சென்ற தொப்பி வைத்த இளைஞர் சிந்துகுமார் என அழைத்தார் ஆம் லெட்சுமணன் ஐயர் எங்களை அடையாளம் கண்டு கொண்டார். பரஸ்பர அறிமுகத்திற்கு பின்பு அவரை அழைத்து சென்று லாட்ஜில் தங்க வைத்தோம்.

மணி 8 ஆகியிருந்தது குத்துவிளக்கோடு மெர்வினும் ஸூம் முரளியும் மற்றும் செல்வம் ஆகியோர் ஹாலுக்கு வந்திருந்து ஆயத்த வேலைகளை செய்ய ஆரம்பித்திருந்தனர். நண்பர் ஸூம் முரளி நெற்றி நிறைய விபூதி பட்டையாக இட்டுருந்தார் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்த மன நிறைவு என்னுள் ஏற்பட்டது.

ஹாலுக்கு வெளியே நண்பர் KR.விஜயன் பட்டறை போட்டு ஜரூராக ரிசப்சன் வேலையை ஆரம்பித்திருந்தார். 9 மணிக்கு நமது புகைப்படபிரியனின் கூடுகை ஆரம்பிக்க வேண்டும் என திட்டம் ஆனால் 10.45 க்கே கூட்டத்தை ஆரம்மிக்க முடிந்தது காரணம் பங்கேற்பாளர்களின் வருகை தாமதப்பட்ட்துதான்.

மெர்வின் ஹாலுக்கும் ரிசப்சனுக்குமாக அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார் இது வரை எத்தனை பேர்கள் வந்திருப்பார்கள் என கேட்டுக்கொண்டே இருந்தார். அவரின் முகத்தில் இரண்டு நாட்கள் தூக்கம் தெரிந்தது. நிகழ்ச்சி நல்ல படியா சிறப்பாக நடக்கனும் என்கிற கவலை ரேகையும் ஓடியதை தெளிவா பார்க்ககூடியதாக இருந்தது.

சிந்து ஹாலின் ஓரமாக இருந்து வரவேற்புரையாற்ற அத்தனை பேரை பற்றியும் ரிப்போர்ட் எடுத்துக்கொண்டிருந்தார். திரு பழனிக்குமார் அவர்களின் தோற்றமும் மிக ஏமாற்றம் தருவதாகவே இருந்தது ஆமாம் அவரும் அவரது முக நூலில் மிக இளைமையான தோற்றம் கொண்ட படத்தையே பதிந்திருந்தார்.கையெடுத்து அனைவரையும் கும்பிட்டு அவரகவே அறிமுகம் செய்து கொண்டு முகவும் எளிமையாக பழகிக் கொண்டார். திரு பழனிக்குமார் அவர்களை நான் KVPA ல் தலைவராக இருந்த காலத்தில் TVPA வின் பல பொதுக்குழு கூட்டங்களில் வைத்து சந்திருக்கிறேன் ஆனாலும் அறிமுகம் இல்லாது இருந்தது. மிகுந்த அறிவான பண்பாளர் அவர்கள்.

நிகழ்சியை நான் தொகுத்து வழங்க சிந்து வரவேற்க இனிதாக ஆரம்பித்தது. முதல் திரியை திருமதி ஜெயராம் அவர்கள் ஏற்றி வைக்க குத்துவிளக்கு பிரகாசித்தது.மறைந்த முகநூல் நண்பர் கிப்டன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல் அமர்வில் பரஸ்ப்பரம் ஒருவொருக்கொருவர் அறிமுகம், புகைப்படபிரியனின் நடைபெற்ற புகைப்பட போட்டியின் நடுவராக செயல் பட்ட திரு.பழனிகுமார் அவர்கள் தான் போட்டியில் கலந்து கொண்ட படங்களை எவ்வாரு தேர்வில் தரவரிசையில் தகுதியானது என தன்னிலை விளக்கம் தந்தார்கள். திரு லெட்சுமணன் ஐயர் அவர்களோடு கலந்துரையாடல் நடைபெற்றது. மொத்தம் 24 பேர்கள் அதில் தொழில் முறையாக 10 பேர்கள்தான் மீதி நபர்கள் புகைப்பட ஆர்வலர்கள் போட்டோகிராபியை மிகவும் நேசிப்பவர்கள். மிக அற்புதமான கலந்துரையாடல் நடைபெற்றது. மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் திரு லெட்சுமணன் ஐயர் மிகப் பொருமையோடு உரையாற்றினார்கள்.

1.30 மணிக்கு உணவு இடைவேளை அத்தனை பேரும் ஒரே குடும்பம் என்ற உணர்வு அந்த உணவரங்கில் வெளிப்பட்டது.

இரண்டாம் அமர்வு ஸ்லைடு ஸோ லெட்சுமணன் ஐயர் அவர்களின் புகைப்பட பதிவுகளை மிக பிரமிப்போடு கண்டு களித்தோம். அவர் வாயாலே அதன் நேர்த்தி அதற்கான தெளிவுகள் தெரிந்து கொண்டோம் மிகவும் உபயோகமான நேரமாக கடந்தது. ஸ்லைடு ஸோ நிகழ்சிக்காக புரெஜக்டர் உபயம் செய்து உதவியவர் நண்பர் குமார் முல்லைக்கல் ஆகும் அதற்கும் நாம் நன்றியை உரித்தாக்குவோம். தொடர்ந்து பரிசளிப்பு விழா பரிசு பெற்றவர்களை வாழ்த்துவோம்.

புகைப்படபிரியனின் கூடுகையில் கலந்து கொண்ட அத்தனை பேருமாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம்.

நிகழ்சியின் முத்தாய்ப்பாக நண்பர் மெர்வின் தான் பதிவு செய்த படம் பற்றிய செய்முறை விளக்கம் தந்தார். இரு ஜம்பவான் வீற்றிருந்த சபையில் எந்த வித தயக்கமின்றி அனைவருக்கும் மெர்வின் கற்றுத் தந்தது சிறப்பு.

ஒருவொரை ஒருவர் முகம் பார்க்காமல் முகநூல் மூலம் ஒரு புதிய உறவை உருவாக்கிக் கொண்டோம்.

எனக்கு நிறைய அண்ணன் தம்பிகள் கிடைத்துள்ளனர் இப்போ எனக்கு மனதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது எனது குடும்பம் இப்போ பெரியது என திருமதி. அஞ்சனா ஜெயராம் கூறியது நிகழ்சியின் வெற்றி மட்டுமல்ல புகைப்படபிரியனின் பிக்பாஸ் மெர்வினின் வெற்றியும் கூட ஆகும்.

காலையில் கலக்ட்ரேட் ஜங்சனில் காத்திருக்க செய்த சிந்துவிடம் கடைசிவரை அதை பற்றி கோப படாமல் நட்பில் கரைந்து போனேன்.

Friday, March 25, 2011

"உலகத்தில் நடக்கும் எல்லாம் வேடிக்கை தான்... உனக்கு அது நேரும் வரை"

கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/-
சன் டிவி க்கு – ரூ.23,474-
<span class=kalaigna_mk_cartoon_deviyar_illam.jpg" src="https://mail.google.com/mail/?ui=2&ik=71c6eef3ba&view=att&th=12edc4e7fc8ce300&attid=0.1&disp=emb&realattid=1413a00ed31bbf74_0.1.1&zw">
தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள்
3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன.
இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.
அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
சூட்டப்படுகின்றன.
அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை.
அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இது குறித்து செய்தி ஒன்று –
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம்,தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.
கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமானவிளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில்ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான்.
ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு
சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!
சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர்.
அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?
சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர்
பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ?
இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?)
அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?
எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா?
மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.