Saturday, July 28, 2007

கவிதைகள்

விடியல்

இரவு முழுவதும்
கடல் மடியில்
உறங்கி துயில்
எழும்பும் சூரியன்.
...........................................................................
ஆம்லெட்

உலகம் முழுவதும்
தினந்தோறும் நடைபெறும்
சத்தான
கருக்கலைப்பு.
...........................................................................

சிகரெட்

விரலிடிக்கில்
புகையும் பணம்.
...........................................................................


கேமரா

எனது எண்ண்க் கனவுகளை
அவ்வப்போது நனவுகளாக்கும்
மந்திரப்பெட்டகம்...
வாழ்வின் அடிததளத்தை
உருவாக்கி விட்ட பொக்கிஷம்...
இலக்கு இன்றி திரிந்த எனக்கு
இலட்சியம் ஏற்படுத்தி
இலட்சஙகள் ஈட்டுக் கொடுத்து
வாழ வழி காட்டிய
மந்திரப் பெட்டகம்...
வாழ்வில் புதிய புதிய
பரிமாணக் கோணங்களை
காண்பித்துக் கொடுத்த
வியூபைண்டரும் உண்டு...
எனது தோளில்
தொங்கி கிடந்தே
வாழ்வில் எனது
இரு புஜங்களையும்
உயர்த்திவிட்ட மந்திரப்பெட்டகம்...
உடல் உண்டு...
கண் உண்டு...
வாய் இல்லை...
ஆனாலும்! என்னிடம்
அடிக்கடி வாய் திறந்து பேசும்
"கிளிக் கிளிக்" என்று...
...........................................................................

பொட்டகுட்டி


ஒரு புது உலகில தவழ்ந்து வந்த உணர்வு எனக்கு.ஒரே வெளிச்சமாயிருந்தது கூடவே, அருகில் சின்னச்சின்ன நாய் குட்டிகளின் விசும்பல் அழுகையும் கீச்சு குரலில் கேட்டது. சொர சொரப்பான் நாக்கால் என் மேலெல்லாம் நக்கி தந்து உறுமல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது என் தாய். வாயால் குதப்பி குதப்பி பால் குடிக்க ஆரம்பித்திருத்தேன்.பால் குடிக்க மட்டும் எங்களிடையே ஒரே போட்டியும் இழுபறியா இருக்கும். கண் தொறக்க ஒரு எட்டு நாளாகும்,என இருவர் எங்களைப் பார்த்து சொல்லிக் கொண்டிந்தது எங்கள் காதில் கேட்டது. ஆண் எத்தனை? பொட்டை எத்த்னை? ரெண்டு மட்டும் தான் ஆணு மத்ததெல்லாம் பொட்ட குட்டிதான் என்று ஒருவர் வருத்தம் தொனிக்க சொன்னார். ஆண் குட்டிக்கு ஆயிரம் ரூபாய் கொடுங்க, பொட்ட குட்டிக்கு முன்னூறு ரூபாய் கொடுங்க. இப்படி ஒரு வாரமா! பலரும் பார்த்துகிட்டும் பேசிக்கிட்டும் போனாங்க. திடீர்னு ஒரு நாள் ரெண்டு குட்டிய யாரோ தூக்கிட்டு போயிட்டாங்க. பெரிய நாயி அப்பப நாக்கால நக்கித் தரும். கொஞ்சம் நெருக்கடியும் கொரஞ்சு இப்ப நல்லா பால் குடிக்க முடிஞ்சது. பொட்ட குட்டிகல வளர்த்து ஒரு ப்ரயோஜனம் இல்லை. நூறு ரூபாய் கிடச்சாலும் இதுகளை தூக்கி கொடுத்துடுங்கனு, அந்த வீட்டுல ஒரு பெரியம்மா சொல்லிகிட்டாங்க. ஒரு நாள் ஒரு சின்ன பையில என்னை தூக்கிட்டு ஒருத்தரு கொண்டு போனாரு, பயங்கர சத்தமா பெரிய நாய் குலைச்சுது. அங்க ஒரு வீட்ட்டுல கொண்டு பொய் விட்டங்க்.அந்த விட்டுல இருந்த சின்ன பையனுக்கு என்ன பார்த்த உடனே பயங்கர சந்தோசம், கைய,கால தூக்கிட்டு ஓடி கிட்ட வந்து செல்லமா தடவி தந்து,முத்தம் தந்தான். அங்க நஞ்சு போன அலுமினிய தட்டுல பாலை ஊத்தி வைப்பாங்க எனக்குதான் நக்கி குடிக்க தெரியல. சின்ன பையனத் தவிர யாருக்கும் நான் அங்கு போய் சேர்ந்ததில சந்தோசம் இல்லை. போயும் போயும், பொட்ட குட்டிய தூக்கிட்டு வந்திருக்கிறியே- என அந்த ஆளை எல்லோரும் திட்டிதீத்தாங்க. ஆண்குட்டின்னாவது காவல் கிடக்கும், இதை போய் யாரால கெட்டி காக்க முடியும் ஊர் மேய போயிடும், இது நமக்கு லாயக்கு படாது, யாருக்காவது தூக்கி கொடுத்துடலாம்னு சொல்லிகிட்டுருந்தாங்கைந்த சந்தோசமும் அதிக நாள் நீடிக்கல, அந்த வீட்டுல உள்ள சின்ன பையன் கதறி அழுதான். எனக்கு அந்த நாய் குட்டி வேணும்ன்ப்பா, இதை கொண்டு போயிராதீங்கன்னு அடம் பிடிச்சு அழுதான். மறுபடியும் ஒரு பையில எனது பயணம் ஆரம்பமானது. என்னை கொண்டு போய் ஒரு கடை வீதியில விட்டாங்க. எங்க பொற்துனே வழி தெரியாம முழிச்சேன். என்னை பார்தத உடனேயே ஒரு சிலர் கிட்ட நெருங்கி வந்து வெக்கங்க்கெட்டதனமாய் என்னை தூக்கிப் பார்த்து பொட்ட குட்டின்னு முகங்க்சுழிசுசு சொல்லிகிட்டு கீழே விட்டுட்டு போயிட்டாங்க.. இன்னும் சிலர் செய்யிறதுதான் ரொம்ப கொடுமை ஒத்த காதை மட்டும் பிடிச்சி என்னை தூக்கிப்பார்ப்பாங்க நானும் மலங்க மலங்க விழிச்சு பார்ப்பேன், எனக்கு சொரணை கிடையாதுன்னு கீழே தொப்புன்னு போட்டுருவாங்க.யாருக்குதான் சொரணையும், வெக்கமும் கிடையாதுன்னு என்க்கு புரியல.இப்ப அங்க இங்கன்னு சுத்திவந்து ஒரு தேர் மூட்டுல படுத்துகிடகேன்.உங்களுக்கு கூட நான் இப்ப வீதிகளில் எதிர்படலாம் ஐம்பது பைசாவுக்கு பிஸ்கட் வாங்கி போடாவிட்டாலும் பரவாயில்ல பீளீஸ் கல்லால் மட்டும் அடிச்சிடாதீங்க... என்னா? கல்லடி பட்டே நான் கோபத்தோட சுத்திட்டிருக்கேன்..

Sunday, July 22, 2007

அலைகடலொரம் தொடரும் துயரம் ...4குமரி மாவட்டத்தில் சுனாமி ஏற்படித்திய தாக்கதினல் ஏற்பட்ட உயிர் இழப்பு உடமைகள் சேதம், உருக்குலைந்து போன மீனவ மக்களின்வாழ்க்கை என அத்தனையும் மறக்க முடியாத வடுக்கள். அதன் பின்பு நிவாரணங்கள், புணரமைப்புகள், தொழில் முனைவுகள், மற்றும் கடல் பற்றிய மனதளவில் மீனவ சமுகத்திடம் ஏற்ப்பட்டிருன்த ஒரு வித பய உணர்வு மனதை விட்டு அகன்று வரும் இந்த வேளையில் தற்போது பயன்க்கர கடல் கொந்தளிப்பும், சூறாவளி காற்றூம் ஏற்பட்டுள்ள்து. மாவட்டதின் பல கடலோர கிரர்மங்களின் அழகிய கடற்கரைகள் அத்தனையும் அசூர அலைகளின் தாக்கத்தால் சீரழிந்து போயுள்ளது. கடற்கரை வீடுகள் பல அலையால் பெயர்த்து எடுக்கபட்டு அழிந்து போயுள்ளது . இந்த இயற்கை சீற்றம் மீனவ சமூகத்தில் கடற்கரையில் வசிப்பதில் ஒரு வித பய உணர்வும், பீதியும் ஏற்படித்தியுள்ளது. உயிர் பாதுகாப்பு இல்லாத சூழ்னிலை உருவாகியுள்ளது. இது போன்ற இயற்கை சீற்றன்களால் கடலையும், கடற்கரையும்,மீனையும் நம்பி வாழ்கின்ற இவர்களது வாழ்வு கேள்வி குறியாக உள்ளது.

அலைகடலொரம் தொடரும் துயரம் ...3


அலைகடலொரம் தொடரும் துயரம் ...2


அலைகடலொரம் தொடரும் துயரம்...


Monday, July 16, 2007

புன்னகை பூக்கள்-தொடர்ச்சி

புன்னகை பூக்க்ள்


எனது தளத்தில் இது முதல் கடிதம் ... எனவே மலர்களால் வரவேற்பு ....குழந்தைகள் படம் 2006 டிசம்பரில் எடுததுஇடம் பிள்ளைதோப்பு கடற்கரை கிராமத்தில் சுனாமி வடுக்கல் மரைந்து அத்தனை குழந்தைகள் மனதிலும் ஒரு வித மகிழ்சி தெரிவதை உணரமுடிந்தது

Sunday, July 15, 2007