Friday, December 3, 2010

நூல்க‌ள்,குறும்ப‌ட‌ம் வெளியீடு

தமிழ் நாடு புதுவை நெய்தல் படைப்பாளிகள்


கன்னியாகுமரி குழு


மூன்றாண்டு நிறைவு


லூர்தம்மாள் சைமன் நினைவு இலக்கியக் கருத்தரங்கம்

நெய்த‌ல் வெளி ப‌திப்ப‌க‌ அறிமுக‌விழா


நூல்க‌ள்,குறும்ப‌ட‌ம் வெளியீடு


இடம்: கார்ம‌ல் மேனிநிலைப் ப‌ள்ளி, நாக‌ர்கோவில்.

நாள்: 11.12.2010 அன்று காலை 9.30 மணி

காலை நிகழ்ச்சி

9.30: வ‌ருகை ப‌திவு

10.00: லூர்த‌ம்மாள் சைம‌ன் நினைவு இலக்கியக் கருத்தரங்கம்

நிகழ்சி தொகுப்பாளர்: மேரி ஜெரின்


அர‌ங்கு அறிமுகம்: வ‌றீதையா கான்ஸ்த‌ந்தின்( க‌ருத்த‌ர‌ங்கு ஒருங்கிணைப்பாள‌ர்)


த‌லைமையுரை: எம். வேத‌ச‌காய‌குமார் (முன்னாள் த‌மிழ் பேராசிரிய‌ர்,கேர‌ள‌ப் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம்)

ஜோ டி குரூசின் புனைக‌தைக‌ளில் கொந்த‌ளிக்கும் க‌ட‌ல்


உரைக‌ள்:


மால‌தி மைத்திரி(ஆசிரியர்,அண‌ங்கு)க‌ரையேறாத‌ க‌ட‌ல்:ஜோ டி குரூஸ் நாவ‌ல்க‌ளை முன் வைத்து


ஜெய‌மோக‌ன்(நாவலாசிரிய‌ர்)ச‌மூக‌ மாற்ற‌த்தில் இல‌க்கிய‌ம்:ஜோ டி குரூஸ் நாவ‌ல்க‌ளை முன்னிறுத்தி


பீட்ட‌ர் பிரான்சிஸ்(ஆசிரிய‌ர்,அலைவாய்க் க‌ரை)நெய்த‌லின் அக‌மும் புற‌மும்:ஜோ டி குரூஸ் நாவ‌ல்க‌ளினூடே


1.00: ம‌ணி உண‌வு இடைவேளை


1.45: நெய்த‌ல் வெளி நிறுவு விழா ம‌ற்றும் நூல்க‌ள்,குறும்ப‌ட‌ம் வெளியீடு


வ‌ர‌வேற்ற‌ல்:ஜ‌வ‌ஹ‌ர்ஜி


நெய்த‌ல் வெளி அறிமுகம்:அ.ஜஸ்டின் திவாகர்


நெய்த‌ல் வெளி நிறுவி சிறப்புரை: மார்க் ஸ்டீபன்(சேசு சபை)


விழா பேருரை:பாத்திமா பாபு(விராங்கனை.தூத்துக்குடி)


த‌லைமை:பொன்னீல‌ன்(நாவலாசிரிய‌ர்)


கலைநிகழ்ச்சி:ஜே.பி.வெனிஸ்(கயல் கலைக்குழு) மற்றும் த.நன்மாறன்(பிரளயம் கலைக்குழு) ‌


நூல்க‌ள்:


முக்குவ‌ர்: வ‌ர‌லாறு,வாழ்விய‌ல்,எதிர்கால‌ம்தொகுப்பாசிரிய‌ர்:வ‌றீதையா கான்ஸ்த‌ந்தின்மீன‌வ‌ முன்னோடி லூர்த‌ம்மாள் சைம‌ன்ஜோ.த‌மிழ் செல்வ‌ன்,அ.ஜ‌ஸ்டின் திவாக‌ர்&ஜ‌வ‌ஹ‌ர்ஜிகொல்ல‌ணிஅ.ஜ‌ஸ்டின் திவாக‌ர்


குறும்ப‌ட‌ம்: பாடுஇய‌க்குந‌ர்: ஜ‌வ‌ஹ‌ர்ஜி


ந‌ன்றியுரை:த.நன்மாறன்

Tuesday, August 3, 2010

TAMIL NADU PUDHUCHERY COASTAL ARTISTS' COLLECTIVE- FIRST MEET

TAMIL NADU PUDHUCHERY COASTAL ARTISTS' COLLECTIVE
Coordinators: Malathi Maithri *& Varethiah Konstantine **FIRST MEET

Venue: 92-93, Arasaham, National Highway,Valliyoor;

Time: 08.08.2010, 10.00 a m to 05.00 p m.NOTICEThe coastal artists of Tamil Nadu and Puduchery under the above banner are holding their south Tamil Nadu Meet at Valliyoor. The collective is the logical sequence of the proceedings of the Kanyakumari Coastal Artists' Collective which was established in December 2007. The collective aims at providing the right environment to promote fine literature and documentation on the life of the fisher folks of Tamil Nadu coast transcending religion and region is among the major objectives of the initiative.The programme begins at 10.00 in the morning. The proceedings include the following:Dr. Vareethiah Konstantine (Coordinator) delivers the introductory note to brief the participants of the background and rationale of the collective and the current meet.Rev. Dr. Francis Jayapathy s.j. (Anthropologist, Ethnographer and Folklorist) will deliver a key note address on the need for documenting the history, culture and lores of the traditional fisherfolks. Dr. M. Vethasahayakumar, Tamil Literary critic and advisor to the collective, will give a special lecture on the significance of making use of the language to record the life and culture of the coastal ethnic groups in order to sustain their cultural identity and future. Mr. Peter Francis (Editor, Alaivaaikkarayil, Thoothukudi) will deliver presidential address. Mrs. Malathi Maithri (Coordinator) will present a lead note to initiate interactions and will moderate the session.Future plans, we hope, will be based on what transpires from the interactions. A little over 35 front line writers, artists, activists and readers from the five southern districts are participating in this meet.Your paricipation is solicited.Malathi Maithri and Vareethiah Konstantine

CoordinatorsFor more info, pl.contact Mr. Justin Thivagar (Programme organiser) at or 09367510043.

------------- ---------------- ---------------------------

* #3, Murugan Koil, Kanuvaippettai, Villiyanoor,Pudhuchery- 605 110. (09367757356); ** Janani. 23/53, KR Puram (West), Thoothoor- 629 176, Kanyakumari District, TN.

(09442242629).

Monday, February 8, 2010

வித்தியாசமாக கலக்கும் தம்பி

வித்தியாசமாக கலக்கும் தம்பி….


பொதுவா கல்யாண வீட்டிற்கு சென்றால் திருமண வாழ்த்து பேனர்களில் நம்ம சினிமா நடிகர்களின் படங்களை பெரிசா போட்டு மணமக்களின் படங்களையும் போட்டு சின்ன சின்னதா வட்டமா வாழ்த்துவோரின் படங்களையும் போட்டு பிளக்ஸ் பேனர்கள் பிரிண்ட் செய்து கட்டி வைத்திருப்பார்கள்.சமீபத்தில் ஒரு கல்யாண வீட்டில் கண்ட வாழ்த்து பேனர் மிக வித்தியாசமான முறையில் இருந்தது. புது விதமான பத்திரிகை பேனர் வாழ்த்து

அப்படியே தினகரன் பத்திரிகை முன் பக்கத்தை போன்று லேஅவுட் செய்திருந்தார். திருமண வீட்டுக்கு வந்த அத்தனை பேரும் வியந்து போய் அந்த விளம்பரம் செய்த தம்பி கலைஅரசு வை பாரட்டினர்கள். நானும் வாழ்த்துக்களை சொன்னேன்.

எப்படி இது என கேட்டால் கப்பலில் வேலை செய்கிறேன் வேலை போக மீதி நேரங்களில் புத்தகங்கள் படிப்பதும், கவிதைகள்,கதைகள் எழுதுவதுமாக நேரம் செல்லும் மீதி நேரங்களில் இப்படி வித்தியாசமான சிந்தனைகள் செய்வதுண்டு அவற்றை கடலில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது நண்பர்கள் மற்றும் சொந்தகாரங்க திருமணத்தில் செய்வதாக சொன்னார்.வேறு என்ன வெல்லாம் செய்திருக்கீங்க என்றோம்.  


சமீபத்தில் பொங்கல் தினம் அன்று என் கொழுந்தியாளுக்கு கல்யாணம். அதில் மணமக்கள் வெட்டிய கேக்கும் அழகான பொங்கல் பானையின் மேல் கேக் செய்து,சுற்றி பழவர்க்கங்களால் படையல் செய்து அலங்கரித்து கரும்பை செருகிவைத்திருந்தேன். அதுபோல உணவு அறையின் வாசலில் சாப்பிடலாம் வாங்க என்று வித்தியாசமான முறையில் வரவேற்று எழுதுயிருந்தேன். வந்தவர்கள் வியந்து வாழ்த்தினார்களாம். படங்களை பாருங்கள் புத்தம் புது சிந்தனைகள் நமக்கும் புது விதமான அனுபவங்களை தருகிறது.