வித்தியாசமாக கலக்கும் தம்பி

வித்தியாசமாக கலக்கும் தம்பி….


பொதுவா கல்யாண வீட்டிற்கு சென்றால் திருமண வாழ்த்து பேனர்களில் நம்ம சினிமா நடிகர்களின் படங்களை பெரிசா போட்டு மணமக்களின் படங்களையும் போட்டு சின்ன சின்னதா வட்டமா வாழ்த்துவோரின் படங்களையும் போட்டு பிளக்ஸ் பேனர்கள் பிரிண்ட் செய்து கட்டி வைத்திருப்பார்கள்.



சமீபத்தில் ஒரு கல்யாண வீட்டில் கண்ட வாழ்த்து பேனர் மிக வித்தியாசமான முறையில் இருந்தது. புது விதமான பத்திரிகை பேனர் வாழ்த்து

அப்படியே தினகரன் பத்திரிகை முன் பக்கத்தை போன்று லேஅவுட் செய்திருந்தார். திருமண வீட்டுக்கு வந்த அத்தனை பேரும் வியந்து போய் அந்த விளம்பரம் செய்த தம்பி கலைஅரசு வை பாரட்டினர்கள். நானும் வாழ்த்துக்களை சொன்னேன்.

எப்படி இது என கேட்டால் கப்பலில் வேலை செய்கிறேன் வேலை போக மீதி நேரங்களில் புத்தகங்கள் படிப்பதும், கவிதைகள்,கதைகள் எழுதுவதுமாக நேரம் செல்லும் மீதி நேரங்களில் இப்படி வித்தியாசமான சிந்தனைகள் செய்வதுண்டு அவற்றை கடலில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது நண்பர்கள் மற்றும் சொந்தகாரங்க திருமணத்தில் செய்வதாக சொன்னார்.வேறு என்ன வெல்லாம் செய்திருக்கீங்க என்றோம்.  


சமீபத்தில் பொங்கல் தினம் அன்று என் கொழுந்தியாளுக்கு கல்யாணம். அதில் மணமக்கள் வெட்டிய கேக்கும் அழகான பொங்கல் பானையின் மேல் கேக் செய்து,சுற்றி பழவர்க்கங்களால் படையல் செய்து அலங்கரித்து கரும்பை செருகிவைத்திருந்தேன். அதுபோல உணவு அறையின் வாசலில் சாப்பிடலாம் வாங்க என்று வித்தியாசமான முறையில் வரவேற்று எழுதுயிருந்தேன். வந்தவர்கள் வியந்து வாழ்த்தினார்களாம். படங்களை பாருங்கள் புத்தம் புது சிந்தனைகள் நமக்கும் புது விதமான அனுபவங்களை தருகிறது.

4 comments:

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

Its amazing Annan KalaiArasu ideas are really supper, thanks for publishing in your blog and also for your great support & encouragement..

I hope, this encouragement will make Annan KalaiArasu to be a emo bird...

said...

Really a good sense of humor.

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in