Friday, March 29, 2013

தமிழீழம் போருக்கு பின்புலம் தமிழகம்


கழிந்த வாரம் இறுதியில் ஊட்டியில் மிக ரம்மியமான இயற்கை சூழலில்,இதமான குளிரில் மூன்று தினங்கள் கழிக்க திட்டமிட்டு சென்றேன். தங்கியிருந்த கிளாஸ் ஹவுஸ்-ன் திறந்து வைத்திருந்த சன்னல் வழியே பனிதழுவிய காற்று உடல்முழுவதும் வருடி குளிர்வித்துக் கொண்டுருந்தது.

இப்போதெல்லாம் குமரியில் வெயிலின் தாக்கம் கழிந்த பத்து வருடங்களாக அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது.வனப்பகுதிகளெல்லாம் அழித்து பணப்பயிர் ரப்பர் மரங்களாகிப் போனது தான் அதிகபடியான வெயிலும் வெப்பத்திற்கு காரணம்.மலைப்பகுதியில் ஆரம்பித்த இந்த ரப்பர் தோட்டங்கள் இப்போது நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வரையிலும் வளர்க்க ஆரம்பித்தாகி விட்டது.பண ஆசைபிடித்த மக்கள் புளியையும், பலாவையும்,மாவையும் அழித்து ரப்பர் மரங்களில் பால்வடித்து பணம் சேர்க்க ஆசைபடுகின்றனர்.தாங்களது எதிர்கால சந்ததி முக்கனிகளை தின்று ருசிப்பதற்கான வாய்ப்பையிழந்து அச்சிடப்பட்ட காகிதங்களில் மட்டுமே முக்கனிகளை காணமுடியும் என்பதனையும் உணர மறந்து மரங்களை வெட்டி சரிக்கின்றனர்.

காலை உணவினை முடித்து விட்டு புத்தக அலமாரியினை நோட்டம் விட்டேன் தடித்த தடிமனான ஐயா பழநெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” சிக்கியது. மூன்று நாட்களுக்குள் முடிந்தவற்றை படித்துவிடுவோம் என உள்ளே புகலானேன். வன்னிக்காட்டில் ஆரம்பித்து படையணிகள் எங்கெல்லாம் பயணித்ததோ அங்கொல்லாம் வலம் வரலானேன் ஊட்டியின் குளிரையும் மீறி என்னுள்ளே உஸ்ணம் பரவிக்கொண்டிருந்தது.

தமிழீழம் போருக்கு பின்புலம் தமிழகம்-

சுமார் ஆறரைக்கோடி தமிழ் மக்களைக் கொண்ட தமிழகத்திற்கு நாற்பத்தைந்து இலட்சம் ஈழதமிழர்களுக்கு துணை புரியும் வலிமையுண்டு அது கடமையுங்கூட ஆகும்.

ஈழதமிழர்கள் போராட்டம் இலங்கையின் உள் நாட்டு பிரச்சனையாகும்.அது அன்னிய நாட்டு பிரச்சனை என சொல்பவர்களே உலக வரலாற்றினையும் இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாற்றினையும் அறியாதவர்கள் ஆவார்கள்.
1936ம் வருடம் ஐரோப்பியா ஸ்பெயின் நாட்டில் ஆளும் சர்வாதிகாரி பிராங்கோ விற்கும் மக்களுக்கும் பெரும் பிரச்சனை மக்கள் அனைவரும் பாசிஸ்ட்டு பிராங்கோவை எதிர்த்து மக்கள் புரட்சி நடை பெற்று வந்த காலம் அது. அவருக்கு துணையாக ஜெர்மனி ஹிட்டலரும்,இத்தாலி முசோலினியும்.
இங்கே இந்தியாவில் சுதந்திர வேட்கையும் போராட்டமும் வலுத்த காலம். இந்திய தேசிய காங்கிரஸ் தனது மாநாட்டில் ஐரோப்பிய ஸ்பெயின் மக்கள் புரட்சிக்கு உதவுவதெனவும், அதற்கான மாணவர் படையினை உருவாக்கி அங்கு சென்று போராடுவதெனவும் ஜவஹர்லால் நேரு முன்னிலையில் தீர்மானம் இயற்றுகிறது.
ஜவஹர்லால் நேருவின் மூலம் அந்த மாணவர்படை லண்டனில் வைத்து பெரோஸ்காந்தி தலைமையில் உருவாகப்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் அந்த மாணவர் படை ஸ்பெயின் சென்று மக்கள் புரட்சியோடு இணைந்து போராடுகிறது அது மட்டுமல்லாமல் ஜவஹர்லால் நேருவும் அங்கு நடைபெற்ற போராட்ட கூட்டங்களிலும் உறையாற்றினார்.
எந்த தொப்புள் கொடி உறவும் இல்லாத ஸ்பெயின்  மக்கள் புரட்சிக்கு படை அமைத்து துணை சென்றது இந்திய தேசிய காங்கிரஸ்.

தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிரான தனது போக்கை இந்திய அரசு மாற்றிக் கொள்ளவிட்டால் ?

இன்று தமிழகம் முழுதும் மாணவர்களிடையே வியாபித்து வளர்ந்து வரும் தமிழீழ விடுதலை வேட்கையினை யாரலும் தடுக்க இயலாது.
www.jawaharclicks@facebook.com

சிங்கள பேரினவாதிகளின் தமிழீழ படுகொலைக்கு டில்லி பின்புலமானால்,தமிழீழ் விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழகம் பின்புலமாவது இயற்கை வகுத்த நியதியாகும் இது காலத்தின் கட்டாயமாகும்.
(பக்கம் -510)