கண்ணீர் கரைகள்
அலை தொடும் கரையில்
நெடுந்தூரம் பயணம் போனது கால்கள்
ஈரமான மணல்களில்
காலடிகள் அடியில்
பதுங்கி அமிழ்ந்து கொண்டது
பரந்து விரிந்த மனமென
கடல் வெளி தூரத்தில்
திறந்தே கிடக்கிறது
உடல் மீது விசிறி செல்லும்
ஏகாந்த காற்று
அதில் மிதக்கும்கடல் புறாக்கள்
வழியெங்கும் கிளிஞ்சல் மலர்
தூவிவரவேற்பு
பட்டு கம்பள விரிப்பாக
கலர் கலர் மணல் பரப்பு
அலை ஓரத்தில் கட்டி போட்டிருந்த
படகின் அணியம் அலையின் அசைவில்
தலையசைத்து வா வா வென்றது
உயர உயர எழும்பிய அலைகள்
ஓடிவந்து என் கால்களை கட்டிக்கொண்டது
கண்ணீர் நுரைகளாக
அலைக் கரங்கள்
கால்களை கட்டிக்கொண்டு ஓ வென அழதது
மானிடா... விட்டுவிடு
மணல்களை கரைகளில் அள்ளுவதை
விட்டுவிடு வென
ஓடிப்போய்வளையில் பதுங்கிய நண்டு
என் முகம் பார்க்க தவிர்த்துக்கொண்டது
திரும்பி பார்க்கிறேன்
அலைகள்
என் காலடிசுவடுகளை
அழித்து போட்டுக்கொண்டே
என்னோடு தொடர்ந்து வருகிறது.
Comments
அன்பு்டன் _ குளஸ்
என்னுடைய பிளாக் முகவரி். kulashanmugasundaram blogspot.com