Skip to main content

Posts

Featured

முண்டந்துறை புலிகள் காப்பகம் பயணம்

பல வருடங்களுக்கு முன் எடுத்த படங்கள் இது. அன்று என்னுடைய பயணத்தில் தம்பி பிராங்கிளின்  உடன் வந்திருந்தான். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் நாங்கள் நாகர்கோவிலிருந்து பைக்கில் கிளம்பினோம். காலை உணவு வழியில் களக்காட்டில்  ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிட்டோம்.ஹோட்டல் சின்னதாக இருந்தாலும் சுவையாக இருந்தது. வயதான அம்மா ஒருவர் கல்லில் தோசை வார்த்து தந்தார்கள். மதியத்திற்கு தேவையான சாப்பாடு புளியோதரையும் மசியலாக அரைத்த தேங்காய் சம்மந்தியும் அவித்த முட்டை என  பொதியாக கட்டி  கையில் எடுத்துச் சென்றோம். குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்களில் இருந்தது. என்னை பொறுத்தவரை பயணம் ஏன்றால் இரண்டு பேர்கள் மட்டுமே பயணிப்பது சால சிறந்தது. நிறைய பேர்கள் வந்து சேர்ந்தால் ஆளுக்கொரு திசையில் அல்லோலப்படும். அது பின்னர் இன்ப சுற்றுலாவாக மாறிவிடும். என்னை போன்ற காட்சிகளின் மீது எளிதில் வசப்படுகிறவர்களுக்கு பயணம் பல அற்புதமான காட்சிகளை  தரிசிக்க தந்து கொண்டே இருக்கும். வழிநெடுக நின்று நின்று படம் பிடித்தபடியே  எனது பயணம் தொடரும்.  முன்டந்துறை அடர்வன வனத்தினை பார்ப்பதற்கு அப்போது...

Latest Posts

மாமல்லபுரம்

அஞ்சலி

டே லைட் ஸ்டுடியோ 1930

பாளையங்கோட்டை நினைவலைகள்

நாட்டார் நம்பிக்கைகள் "சக்கைப்பழம்"

கொண்டல் கண்காட்சி

எழுத்தும் எதிர்நீச்சலும்

"உலகத்தில் நடக்கும் எல்லாம் வேடிக்கை தான்... உனக்கு அது நேரும் வரை"

புகைப்பட போட்டி- பரிசு

மரப்பறவை