கோடாறிகளின் முனை மழுங்கட்டும்
நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் பயணப்படும் போது நான் கண்ட காட்சி இது, மொட்டையடிக்கபட்ட ஒரு வேப்பமரத்தின் நுனிப்பகுதிகளில் சட்டிபானையை தொப்பி போன்று கவிழ்த்து வைத்திருந்தார்கள் வேடிக்கையாகவும் வினோதமாகவுமிருந்தது।
சுங்கான்கடை என்கின்ற அந்த ஊர் மக்களிடம் விபரம் கேட்டேன், விசாயிகளும் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்பவர்களும் அதிகம் வசிக்கிறார்கள் இங்கே। வேப்பம் மரத்தின் இலைகளை முறித்து வயலுக்கு உரமாக இடுவார்களாம் அதன் பின்பு மொட்டையடிக்கபட்ட அந்த மரம் வெயில்லடிபட்டு பட்டு விட கூடாது என இந்த முன்னேற்பாடாம்.
நகர் புறங்களில் வீடுகள் கட்ட மரங்களை முறித்து அழிப்பதும்,வீடுகளின் அழகை மரம் மறைக்கிறது என வெட்டி எறிவது அன்றாடம் நடக்கிறது, இது படித்த நாகரிக மனிதர்கள் செய்யும் செயல்.
பாருங்கள் கிராமத்தில் படிக்காத பாமர விவசாயிகளின் அறிவை,இயற்கையை அவர்கள் நேசிக்கிறார்கள்,இயற்கையோடு ஒன்றித்த இசைந்த வாழ்வு வாழ்கிறர்கள். மண்ணை நேசிக்கும் இவர்கள் நாம் வாழ இவர்கள் உழைக்கிறார்கள்.
இனியேனும் வீட்டுக்கு ஒரு மரம் நடவில்லை எனறாலும் பரவாயில்லை, இருக்கும் மரத்தையாவது வெட்டி எறியகூடாது என முடிவுக்குவருவோம்.
Comments