மீண்டும் ஜடமாகி மவுனமாகி போகிறேன்
இலங்கையில் தினம்தோரும் நடந்தேரும் தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டம் சு.ப.தமிழ்செல்வன்- யை குண்டு வீசி அழித்தொழித்தது,
இந்த சம்பவம் சமாதான சமரச உடன்படிக்கை, மற்றும் மனித நேய செயல்களில் இலங்கை அரசு ஈடு படாது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மனதில் வேதனையோடு எழுதுகிறேன், உள்ளத்தில் தோன்றும் உணர்வை உண்மையேடு வெளிக்கொனர முடிய வில்லை, உணர்வற்ற ஜடலமாக நான் மாறிப்போய்யுள்ளேன்।
இந்திய அரசியல் நிகழ்வுகளும்,கொள்கையும் நெறியுமில்லாத அரசியில் வாதிகள் மேற்கொள்கின்ற முடிவுகளும் என்னைப்போன்று பலரையும் மாற்றிப்போட்டுள்ளது, நாங்கள் முடமாகி கிடக்கிறோம்.
பள்ளி சிறுவனாக பாளையில் பயிலுகியில் வகுப்பாசிரியர் அறிவித்தார் இலங்கையில் யுத்தமாம் தமிழ் மக்கள் யுத்தத்தில் மடிகிறார்கள் என்று, என் தமிழ் சகோதிரிகள் கற்பிழக்கிறார்களாம், உடுக்க உடுதுணியின்றி வருமையில் வாடுகிறார்கள் என்று.
வீட்டில் அம்மாவிடம் கேட்டு நிறைய துணிகளை கொண்டு சென்று வகுப்பாசிரியரிடம் கொடுத்தேன் என்னைப்போல் நிறைய சக மாணவர்கள் தூணிமணிகளை கொண்டு வந்து சேர்த்திருனர்। அந்த வயதில் அது ஒரு மன நிறைவு தந்தது।
பின்பு உயர்நிலைப்பள்ளி பயிலும் வேளை நாங்கள் குமரிக்கு மாற்றலாகி வந்திருந்தோம். அப்போது இலங்கையில் பயங்கர யுத்தம் நடந்து கொண்டிருந்த்தது. நாகர்கோவில் குளத்து பஸ்ஸ்டாண்ட் அருகில் ஒரு ஓலைக் கொட்டகையில் தமிழ் ஈழ விடுதலைப் போரின் யுத்தக் காட்சிகள், மற்றும் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பயிற்சி பெறும் காட்சிகள், புகைப்படங்களாக கண் காட்சி வைத்திருந்தனர். அத்தனையும் வேதனைக் காட்சிகள். யுத்தப் படங்களைப் பார்த்து கண் கலங்கினேன். ஓலைக் கொட்டகையின் வெளியில் விடுதலைப் புலிகள் உண்டியல் குலுக்கி பணம் பெறுவதைக் கண்டேன். அன்று பஸ்ஸில் செல்வதற்க்கு என்னிடம் இருந்த இருபத்தியைந்து பைசாவை உண்டியலில் போட்டு என் உணர்வை வெளிப்படித்திக்கொண்டேன்.என்னைப் போல் பலருக்கும் இதுப் போன்ற உணர்வை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் தமிழகத்தில் பலருக்கும் அன்றைய நேரம் ஏற்பட்டிருக்கும்.
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிகின்றது, உணவின்றி சாவு நிகழ்கின்றன, என்ற தகவல் இந்தியாவுக்கு வர இந்திய ராணுவம் இங்கிருந்து உணவுகளை விமானத்தில் எடுத்து சென்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வீசுகின்றது என்றவுடன் நாங்கள் அடைந்த மகிழ்விற்கு எல்லையே கிடையாது.
இலங்கை ஈழத்தமிழர் பிரச்னை எங்களோடு இறண்டற கலந்து விட்ட ஒன்றாகும். இன்றும் எங்களுக்குள்ளே வேரூடூருவிக்கிடக்கிறது . போரில் அத்தனையும் இழந்த நம் மக்கள் அகதிகளாக இந்திய மண்ணில் திரும்பி வந்து வாழ்கின்றனர். சொந்தமண்ணிலேயே அகதிகளாகப் பாவிக்கப்பட்டு அகதி முகாம்களில் அடைப்பட்டுக்கிடக்கிறார்கள்। இதிலும் வேதனை இந்திய அரசு வழங்கும் சொற்ப்ப சவுகரியங்களுடன் நலிந்து போய் வாழ்கின்றனர்.
என்று அந்த மண்ணில் போர் நிறுத்தங்களும், சமாதான வாழ்க்கையும் நிலவப் போகிறது। என்று அந்த மண்ணில் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்திடப்போகிறது, என்று அந்த மண்ணில் வெள்ளைக் கொடிப் பறக்கபோகிறது, என்று அந்த மண்ணில் சமாதானப் புறா பறக்கப் போகிறது, என்று யுத்த கரு மேகங்கள் கலைந்து புதியதோர் விடியலாக தமிழ் ஈழம் பிறந்திடப் போகிறது.
விடுதலைக்காக தன் உயிர் ஈந்த என் சகோதர சகோதரிகளுக்கு என் கண்ணீர் அஞசலி.
விடுதலைக்காக தன் உயிர் ஈந்த என் சகோதர சகோதரிகளுக்கு என் கண்ணீர் அஞசலி.
இந்திய தமிழ் மண்ணிலிருந்து பிராத்திக்கிறேன்.
மீண்டும் ஜடமாகி மவுனமாகிப் போகிறேன்।
Comments
may be your gvt can do something..