மாமல்லபுரம்
நண்பர்களோடு இந்த வருடம் 18/07/2026 மாமல்லபுரத்திற்கு பயணம் செய்தேன். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பார்த்தற்கும் இப்போதைக்கும் நிறைய மாற்றங்களை காண முடிந்தது.மாறாமல் இருப்பவை பல்லவர்கள் காலத்திய கல் சிற்பங்கள் மட்டுமே. அவற்றையும் உப்புக்காற்று அரித்து வருகிறது.
தொல்லியல்துறை இன்னும் சிரத்தையோடு இந்த புராதன கலைப் படைப்புகளை பராமரிக்க வேண்டும். யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட படைப்பு இது. கேரளாவில் சுற்றுலா வழிகாட்டிகள் பார்வையாளர்களை குழுவாக கூட்டிச் சென்று கலைப்படைப்புகளை பற்றியும் அதன் வரலாற்றையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இங்கு வழிகாட்டிகள் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பது பெரும் குறையாகத் தெரிந்தது.
பார்வையாளர்கள் நுழைவு கட்டணத்தை ஆன்லைனில் பதிவுகள் செய்ய வாய்ப்பிருக்கிறது, ஆனாலும் நேரடியாக பணம் செலுத்த சொல்கிறார்கள். தமிழ் மொழி தெரியாத செக்யூரிட்டிகளை வேலைக்கு வைத்திருப்பது இன்னும் கொடுமை.
மாமல்லபுரம் சாலைகளில் பசுக்கள் சகசமாக சுற்றித்திரிகின்றன. மிகச் சுமாரான சுகாதரங்களும்,பாராமரிப்புகளின்றியே நகரம் காணப்படுகிறது.
கிபி 668 காலத்து படைப்புகளை காணவரும் தலைமுறைகள் மற்றும் வெளி நாட்டினரை கவரும் வண்ணம் இந்திய தொல்லியல் துறை இன்னும் ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என மனதில்பட்டது. மாவட்ட நிர்வாகம் தூய்மை மற்றும் சுகாதார விடயங்களை நூறு சதமானம் ஏற்பாடுகளை செய்தால் மட்டுமே மாமல்லபுரம் காண வரும் சுற்றுலா பயணிகளை இனி வரும் காலங்களில் ஈர்க்கும்.

வரலாறு மட்டுமே தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்க்கையும் பறைசாற்றும்.
- ஜவஹர்.ஜி
Comments