டே லைட் ஸ்டுடியோ 1930


78 வயது மூத்த ஒளிப்படக் கலைஞர் மாணிக்கம் அண்ணாச்சி சொன்ன தகவல். 

அந்த காலத்தில் 1930

களில் நாகர்கோவிலில் 'டே லைட் ஸ்டுடியோ' என்று  ஒன்றினை ஆறுமுகம் என்பவர் நடத்தியுள்ளார். மின்சாரம் எல்லா பகுதிகளுக்கும் வராத காலம்.

காலை 10 மணிக்கு திறந்து மாலை 3 மணிக்கெல்லாம் படமெடுக்கிற வேலையினை முடிந்துவிடுவார்களாம். காரணம் அப்போதைய குமரி மாவட்டத்தில் எப்போது வெயில் வரும் என்பது கணக்கிட முடியாது. சிராபூஞ்சி மாதிரியாக  சதா மழை பொழிந்து கொண்டே இருக்கும். வெளியே வருகிற ஜனங்களின் கைகளில்  எப்போதும் குடை வைத்திருப்பார்களாம்..

மிக அற்புதமான அமைப்பில் அந்த ஸ்டுடியோ இயங்கியிருக்கிறது. தற்போதைய சுந்தர் ரேடியோவிற்கு பின்புறத்தில் அது இருந்திருக்கிறது. ஓட்டுக்கட்டிடம் அதன் மேல்கூரையில் நீள சதுர  வடிவில் சாரளம் போன்ற ஒரு மறைப்பு அமைப்பு. கீழிருந்து  கயிற்றினை பிடித்து இழுத்தவுடன் அந்த சதுர வடிவு சாரள மறைப்பு கீழ் நோக்கி நகர்ந்து இயற்கையான சூரிய ஒளி நேச்சுரல் லைட் ஸ்டுடியோவினுள் வந்து வீழும்.  அந்த இயற்கையான  ஒளியில்தான் படம் பதிவு செய்துள்ளார். இன்னும் அந்த ஸ்டுடியோவின் சிறப்பு பகல் நேர வெளிச்சத்தில் தான் பிரிண்டிங்கும் செய்துள்ளார். இருட்டறையில் சுவற்றில்  சதுரமாக துளை செய்து  வைத்து வெளிப்புற வெளிச்சம் உள்ளே வரும் வகையில், அதில் பொருத்தப்பட்ட கண்ணாடிகளை திறந்து மூடுவதன் மூலம் பிரிண்ட் செய்துள்ளார். இப்படியான தனித்துவமான கலைஞர்கள் பலர் இருந்துள்ளனர்.

கலஞர்கள் விலை உயர்ந்த கேமிராக்களை கைகளில் வைத்திருக்கின்றனர். மிகுந்த அர்ப்பணிப்போடு என்ன செய்திருக்கிறார்கள் என்பதே முக்கியமானது. 

இன்று  ஜுன் 29 உலக கேமிர தினம். இப்போது எல்லோரும் கேமிரா மேன்களே! எல்லோர் கைகளிலும் செல்போன் கேமிராக்கள் இருக்கிறது. கேமிராக்களால் கண்காணிக்கிற உலகத்தில் நாம் வாழ்கிறோம்.

29/06/2026

ஜவஹர்.ஜி



Comments