பாளையங்கோட்டை நினைவலைகள்

முகநூலில்
பாளையங்கோட்டை சவுத் பஜாரில் ஒரு ஜவுளிக்கடை இருந்தது. அதன் பெயர் இப்போது ஞாபகத்தில் இல்லை. பள்ளிக்கூடம் திறக்கிற காலங்களில் அந்த கடைக்கு யூனிபார்ம் துணியெடுக்க கூட்டிட்டு போவாங்க. வரிசையா ஐந்து பேரும்  அணிவகுத்து நிற்போம்.  எடுத்த துணிகளை வாசலில்  தையல் மிசினோடு அமர்ந்திருக்கும் நபரிடம் தைப்பதற்கு கொடுப்போம். 

அப்போதெல்லாம் ஜவுளிக்கடையில் அக்கவுண்ட் சிஸ்டம் தான். மாதந்தோறும் கணக்காப்பிள்ளை எங்கள் வீட்டுக்கு  பணம் வசூலிக்க வருவார். ஏன்; பாளை மார்க்கெட் பக்கம்  தாதாபாய் நேரோஜி என்ற டாக்டர் இருந்தார். அந்த ஆஸ்பத்திரியிலும் அக்கவுண்ட்  தான்.நாங்கள் ஜந்து பேர்களில் ஒருத்தன் மாற்றி ஒருத்தருக்கு காச்சல் பீச்சலென்று படையெடுப்போம்.மாதம் தோறும் கம்பவுண்டர் பணம் வசூலிக்க வீட்டுக்கு வருவார். 

முருகன் குறிச்சி வாய்க்கா பாலம் அருகில் லைன் வீட்டில் வாடகைக்கு இருந்தோம். தலையில் தயிர் பானையை சுமந்தபடி ஒரு ஆச்சி தினமும் வருவாள். செம்பு நிறைய தயிர் ஊத்திவிட்டு,  தனது பெருவிரலால் தனது தோகத்தில் ஸ்டாம்பேடு மாதிரி தேய்த்து வீட்டின் முன் சுவற்றில்  குறித்துவிட்டு போய்விடுவாள்.அது கோடுகள் போல சுவற்றில் பதிந்திருக்கும்.   மாதக்கடைசியில் கிழவி வந்து அதனை எண்ணி இத்தனை நாளென்று கணக்குப் போட்டு பணம் வசூலிப்பாள் . 

ஒரு நாள் ஆகாத வெயிலு, பணம் வசூலிக்க வந்த கிழவி ஆசுவாசமா அப்படாவென்று,  வராந்தா திண்ணையில் அமர்ந்தாள். தயிர்கிழவிக்கு ஜம்பர் அணிகிற வழக்கம்  வேறு கிடையாது. கிழவியோட முலை ஐந்து கிலோ அரிசி பையைப் போல சரிந்து கிடந்தது. அது என் இளைய தம்பியின் கண்களில் பட; பயல்  பாய்ந்து கிழவிக்க பாலை தொட்டுப் பார்க்க,  கிழவி அய்யோ... 'அம்மோவ்' என்று பதறிப்போய் தயிர் பானையோடு ஓட்டம் பிடித்தாள். அன்றையோடு கிழவிக்க தயிர் கணக்கு முடிவுக்கு வந்தது. 

ஏலு, எதுக்குல கிழவிக்கத பிடிச்ச என்றால்! நானெங்க பிடிச்சேன்! பால் வருதான்னு அமுக்கிப் பார்த்தேன் என்றான் அப்பாவியாக.

முன்பொரு காலத்தில் தள்ளு வண்டியினை உருட்டியப்படி தெருத்தெருவாக தைப்பதற்கு தையல்காரர்கள் கூவிக் கொண்டு வருவார்கள். இப்போதெல்லாம் அது வழக்கொழிந்து போனது.
 டெயிலர்கடைகளில் தைப்பது குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ரெடிமேட் மயமாகிவிட்டது.

#Jawaharclicks #tailoring #alterations #roadsidetailor #nagercoil

Comments