Thursday, October 22, 2009

பொங்கு ச‌னி

இந்த தடவை சுத்த சைவமா எல்லாரும் இருக்கனும் பார்த்துகிடுங்கன்னு... ஆர்டர் போட்டார் அண்ணச்சி.
எங்க போகப்போறோம் தெரியும்ல்லா...திருநள்ளர்க்கு இப்படி அன்னாச்சி ஆரம்பித்து வைத்தார்.பிறகு அந்த டூரை பத்தியே பேசி பேசி அதை அப்படி இப்படின்னு டெவலப்பு செய்தது நண்பர் ஐயப்பனுடைய வேலையாக‌ இருந்தது. அன்னாச்சி யாரும் குடிக்க கூடாதுன்னு கண்டிப்புடன் எல்லோர்ட்டையும் சொல்லிட்டார்.ஆக அது ஒரு பக்திமயமான டூர் மாதிரி வடிவத்திற்குள் வந்து விட்டது.

சீன பழமொழி ஒன்று நாபகத்திற்கு வந்தது ஆயிரம் புத்தகங்கள் படிக்காதவனும்,ஆயிரம் மையில் தூரம் நடக்காதவனும் வாழ்க்கையில் எதையும் காணாதவன் என்று.

அக்டோபர் 2ம் தேதின்னு நாளும் குறித்தாகிவிட்டது.அண்ணச்சிக்க டாட்டா சுமோ அதன் டிரைவராக விஜயன் ஓட்டவேண்டும் என்று முடிவானது.குறிப்பிட்ட நாளும் கிழமையும் வந்ததுஅண்ணச்சிக்க வண்டியும் வந்தது டிரைவர் விஜயன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி, காரணம் அண்ணச்சி. ்க டாட்டா சுமோ அரிது பழதான நிலையுள்ள கிடுவு வண்டி.ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதிலா இத்தனை தூரம் நாம் பயணம் போவது என வினா மனதில் எழும்பியது.

டிரைவர் விஜயன் முழி பிதுங்கி காணப்பட்டார் ரகசியமாக அருகில் போய் கேட்டேன் எப்படி என்ன செய்வது என்று.எல்லா பாரத்தையும் ஆண்டவன் மேலே போடுவேம் அவன் பாத்துகிடுவான் எல்லாரு வண்டியில ஏறுங்கன்னு தைரியம் சென்னார்.வண்டி புகையை கக்கிய படி நாக‌ர்கோவிலிருந்து கிளம்பியது.

வழியில முப்பந்தல் அம்மன் கோவிலில்,பனகுடியில‌ மாதாகோவிலில் வேண்டிக்கொண்டு எங்கள் பயணம் ஆரம்பித்தது.

வண்டியின் கண்டீசன் மிக மோசமான நிலை.அன்னாச்சியும் அவர்களின் நண்பர்களிடையேயும் எந்த விதமான பதட்டமும் காணமுடியவில்லை.இரவு முழுதும் தொடந்த எங்கள் பயணம் அதிகாலை திருநள்ளார் நெருங்கி ஒரு ஊரில் பம்புசெட்டின் முன்னால் நின்றது.சுகமான பம்புசெட் குளியல்.திருநள்ளாரின் மூண்று கிமி முன்னதாக போலிசாரால் தடுத்து நிறுத்த பட்டோம் அங்கே அதிகபடியான வண்டியும் ஜனக்கூட்டமக இருந்தது. டிரைவர் விஜயன் அள்ளிவிடார் போலீசிடம் கலவரத்தை படம்புடிக்கிற பத்திரிகைகாரங்க வண்டியில இருக்காங்கன்னு.சலூட்டடித்து வழியனுப்பினர் போலீஸ்.திருநள்ளாரின் கோவிலருகிலேயே வண்டி போய் சேர்ந்தது.
அன்று சனிப்பெயர்ச்சி கட்டுகடங்காத கூட்டம் எங்கும் ஒரே ஜனத்திறள்.வெறும் வயிற்றேடு சாமியை தரிசனம் செய்ய நண்பர்கள் நின்றார்கள் சுமார் நான்கு மணிநேரம் கீவுவில்.அப்படியும் கனநொடிப்பொழுதுதான் சாமி தரிசனம் தான் நண்பர்களுக்கு கிடைத்துள்ளது.நான் வழக்கம் போல கேமிராவேடு ஊர் சுற்றினேன்.

திருநள்ளாரின் குளத்தில் நீராடிவிட்டு ஏதாவது உடமையை விட்டு விட்டு வரவேண்டுமாம் இது ஐதீகம்.செய்த பாவஙகள் விட்ட உடையையேடு போய்விடுகிறதாம்.குளக்கரையிலும்,வழியெங்கிலும் பழைய துணி்களும் பிஞ்சுபோன பையும்,ஜட்டி,பிரா,ஜம்பர் சேலை இப்படி இரைந்து கேட்பாரற்று கிடக்கிறது.நாலு பாவப்பட்டவங்களுக்கு இந்த துணிகளை கொடுத்ருந்தால் புண்ணியம் கிடைச்சிருக்கும் என மனதில் தோன்றியது.

தேங்காய் விடலை போடும் இடத்தில் குவியல் குவியலாக தேங்காய் உடைபட்டு கிடக்கிறது.


மிக அருகாமையில் தான் காரைக்கால் உள்ளது அங்கு சரக்கு விலை குறைவு என டிரைவர் விஜயன் சிறப்பு தகவல் தர.அண்ணச்சி.யிடம் தீடீர்ன்னு ஒரு மாற்றம் கிளப்புங்கப்பா வண்டியைன்னு உத்தரவு தந்தார்.பிறகு என்ன காரைக்கால் போய் சேர்ந்தோம். ஏசி ரூமில் ஜேடிஃப் மூடிகள் திறந்தன.உற்ச்சாகம் மடை திறந்தது போல ஓடியது.இரவு காரைக்காலில்.
சுத்த சைவம் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்ந்தது.

திருநள்ளாரில் பாவங்கள் தொலைந்ததா ? நம்மை பிடித்தி்ருந்த சனி இத்தோடு விட்டுவிட்டதா? இல்லை தொடர்கிறதா என்ற கேள்வி மட்டும் என் முன் இன்றும் நிற்கிறது.

தங்க நாற்கர சாலையில் பயணம் மி்கவேகமனது.ஆனால் மிக நீண்ட விரிந்த அந்த வழியில் மரங்களோ செடிகளோ காண முடியவில்லை பொட்டல் காடாக உள்ளது.ஆனால் ஊர்களின் உட் புற சாலையில் பயணம் மிக ரம்மியமாக இருந்தது அடர்ந்து விரிந்த மரங்கள் வானமா குடை பிடித்து வந்தது.இரும‌ருங்கும் சாலையில் மரங்கள் அணிவகுத்து நின்றது.அத‌ன் ஊடே ம‌ஞ்சள் வெயில் உட் புகுந்து கோடுகிழித்து வந்தது.
மழை வெள்ளம் கரைபுரண்டு ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் ஓடினாலும் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்ச‌ம் உள்ளதகவே தெரிகிறது ஆங்காங்கே தண்ணீர் குடங்களோடு மக்கள் அலைவதை காணமுடிந்தது.


ச‌னிப‌க‌வானை பார்த்தாயிற்று இனி பொங்கு ச‌னிப‌க‌வானை பார்க்க‌வேண்டும் என்றார் அன்னாச்சி என‌வே திருகொள்ளிகாட்டு போனோம்.அதுவும் திருக்குவ‌ளை தாண்டி நீண்ட‌ ஒத்தைய‌டி ப‌ய‌ண‌ம்.வ‌ழிநெடுக‌ வ‌ய‌ல்வெளியும் ப‌ச்சை ப‌ச‌லென‌ க‌ண்க‌ளுக்கு விருந்துதான்.த‌ஞ்சையின் நெற்க‌ளைஞ்சியம் மிக் பிர‌மிப்பாக‌ இருந்த‌து ஒருப‌க்க‌ம் நாத்தை ந‌டுகிறார்க‌ள் இன்னொருபுர‌ம் க‌திர் அறுக்கிறார்கள்.

நெல் ம‌ணியில் ப‌த‌ரை உத‌ற‌ தெரிந்த‌ மானிட‌னுக்கு வாழ்வில் ப‌தறு என்ற‌ தீமைக‌ளை உத‌ற‌ இறைவ‌னை நாடுகிறான்.வ‌ழியில் கீர‌ல‌த்துர் என்ற‌ ஊரில் வ‌ண்டியை இளைப்பாற‌ விட்டோம்.நண்பர்களும் தாக சாந்தியில் ஈடுபட்டனர்.அங்கு ஒரு பொட்டிகடை வாச‌லில் போஸ்ட்பாக்ஸ் க‌ட்டி தொங்க‌விட்டுருந்த‌து அதை பூட்ட‌வில்லை திற‌ந்து பார்த்தால் ந‌ம‌து நாட்டின் ச‌க‌ பிர‌ஜை பொருப்பாக‌ தீப்பெட்டி வைக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.ஈமெயில் வ‌ந்த‌ பிற‌கு கிர‌ம‌ங்க‌ளில் கூட‌ த‌பால் எழுது ப‌ழ‌க்க‌ம் இல்லை என்ப‌தை உண‌ரமுடிந்த‌து.

மாலை ஆகிவிட்ட‌து த‌ஞ்சை பெரிய‌ கோவிலுக்கு வ‌ரும்போது.சில்ல‌வுட்டில் புறாக்க‌ள் கோவிலின் கோபுற‌த்தை நோக்கி ப‌ற‌ந்தன‌.

Thursday, October 8, 2009

வேதசகாயகுமார் 60 - சிறப்பு இலக்கியச் சந்திப்பு

வேதசகாயகுமார் 60


மொழிதான் ச‌மூகத்தைக் கட்டமைக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் பார்ப்பனருக்கு விடுதலை தந்தது மொழி.இருபதாம் நூற்றாண்டில் தலித்துகளுக்கும் மொழிதான் விடுதலை தந்தது.தலித் இலக்கியம் தலித் இயக்கத்துக்கும் வித்திட்டது போன்று கடற்கரைச் சமூகத்தைத் தட்டியெழுப்பும் சக்தி கொண்ட இலக்கியங்கள் நெய்தல் நிலத்திலிருந்து உருவாக வேண்டும் என்னும் கருத்தியலுடன் இலக்கிய விமர்சகர் வேதச்காயகுமார் அவர்கள் கடந்த இரண்டாண்டுகளாகக் கடற்கரைப் படைப்பார்வலர்களை நெறிப்படுத்தி,வழிநடத்தி வ‌ருகிறார்.

மொழியைக் கையிலெடுத்துக் கொள்வதன்மூலம் நெய்தல் ச‌மூகம் தன் விடுதலைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பது அவர் நிலைப்பாடு.அறிவுத் தளத்தில் இயங்கும் இளம் தலைமுறையைக் கடற்கரைச் சமூகத்தில் உருவாக்கிவிட வேண்டும்,கடற்கரைப் படைப்பாளிகள் போதனை மொழியிலிருந்து விடுபட்டுப் பொதுப்பரப்பின் உரையாடல் மொழியைக் கைப்பற்றவேண்டும் என்பது அவரது பேராவா. இதற்கெனத் தம் நேரத்தையும் அறிவுவளத்தையும் படைப்பாளிகளுடன் தொடர்ந்து செலவிட்டு வருகிறார் அவர்.

இலக்கியவாதியாகவும் ஆய்வாளரகவும் இலக்கிய விமர்சகராகவும் தமிழ் உலகுக்கு ந‌ன்கு அறிமுகமான பேராசிரியர் வேதசகாயகுமார் நெய்தல் படைப்பாளிகள் கூடுகையின் நெறியாளராகவும் விளிம்பு மக்களின் வளர்ச்சியில் அக்கரை கொண்ட உங்களின் பங்களிப்பை நாங்கள் பதிவு செய்யக் கடன்பட்டுள்ளோம்.


பேராசிரியர் வேதசகாயகுமார் தனது 60 வயதை நிறைவு செய்வதை முன்னிட்டு இந்த சிறப்பு இலக்கியச் சந்திப்பு நிகழ்கிறது.அனைவரும் வாருங்கள்....குமரி நெய்தல் படைப்பாளிகள்.


நிகழ்ச்சி நிரல்


இடம்:கார்மல் மேல்நிலைப்பள்ளி வாளாகம்,நாகர்கோவில்.

நாள்:11 அக்டோபர் 2009 மாலை 2 மணிக்குதலைமை: அருட்திரு. பிரான்சிஸ் ஜெயபதிவரவேற்றல்: ஜ‌வஹர்ஜிஆய்வுகட்டுரை: ஆன்றனி கிளாரட்(விழித்தெழும் விளிம்புகள்)கவிதை வாசித்தல்:நேசன் (முண்டம்)கதை நிகிழ்த்தல்:குறும்பனை சி.பெர்லின்

(முடுதம் பாய்)

உரை:வறீதையா கான்ஸ்தந்தின் (ஒரு பூவாளியும் சில பூச்செடிகளும்)சிறப்புரை:ஜெயமோகன்ஏற்புரை:பேராசிரியர் வேதசகாயகுமார்தலைமையுரை:அருட்திரு.பிரான்சிஸ் ஜெயபதிநன்றியுரை: கோடிமுனை கென்னடி
Wednesday, October 7, 2009

மரப்பறவை


மரம் கொத்தியா மரம்குத்தியா...


குமரி மாவட்டத்தில் சடையால்புதூர் கிராமத்தில் ஜேசுராஜா என்பவரது வீட்டில் மரம் ஒன்றில் முறிந்து காய்ந்து போன கொம்பு ஒன்று நீண்ட கழுத்து கொண்ட பறவை போன்றதொரு தோற்றத்தில் உள்ளது.

நண்பர் புகைப்படகலைஞர் ராஜுவின் கேமரா கண்களுக்கு வித்தியசமாக அது பட அதை பட‌ம் பிடித்து வந்துள்ளார்.அவருக்கென பிளாக் வசதிகள் ஏதுமில்லாத காரணத்தால் அதை பிரசுரம் செய்ய எனது பிளக்கில் இடம் கொடுத்துள்ளேன்.

அவருக்கு நமது வாழ்த்துக்கள்....