எழுத்தும் எதிர்நீச்சலும்
நாகர்கோவில் கார்மல் பள்ளி வாளாகத்தில் உள்ள மாதா கெபியின் முன் ஒரு பெரிய கொன்றை மரம் கிளைவிரித்து படர்ந்து கிடந்தது சித்திரை மாதம் தொடங்கிவிட்டது என்பதின் அடையாளமாக அந்த மரம் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து தொங்கியது. உதிர்ந்த பூக்களின் இதழ்களால் அந்த இடம் முழுவதும் மஞ்சள் கம்பளம் விரித்தது போன்றிருந்தது.பொழுது சாய்ந்து மாலை இருக்க ஆரம்பித்தது. நெய்தல் படைப்பாளர்கள் கொன்றையின் அடியில் காத்திருந்தோம். அன்று சிறப்பு விருந்தினராக வரயிருப்பது எழுத்தின் மூலம் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் எழுத்தாளர் கவிஞர் ஹச். ரசூல் ஆவார்.
கவிஞர் ரசூல் குறித்த நேரத்தில் வந்து சேர, நெய்தல் படைப்பாளர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது. நாங்கள் குழுமி இருந்த அறையில் மின்தடை படவே அறையின் வெளியில் இயற்கை சூழ்நிலையில் மரநிழலில் கூட்டம் தொடங்கியது. நாங்கள் சுமார் 15 பேர்கள் குழுமியிருந்தோம்.சிறப்பு விருந்தினர் அறிமுகமும், அதை தொடர்ந்து பங்கேற்ப்பாளர்கள் அறிமுகமும் நடந்தேறியது.கவிஞரின் படைப்புகளை பற்றியும்,எழுத்தின் நடையையும் அதன் வீரியத்தையையும் பற்றி அறிமுகப்படுத்தினர். எழுத்தாளர் வரீதையா அவர்கள் கவிஞரை ஊர்விலக்கம் செய்திருப்பதை பற்றி கூறியவுடன் சுவாரசியமும்,அதிர்ச்சியும் தொற்றிக்கொண்டது எங்களிடையே.
கவிஞர் ரசூல் எங்களோடு பேச ஆரம்பித்தார். அரசு அதிகாரியாக புள்ளியில் துறையில் பணியாற்றுவதாகவும்,மனைவி மக்களோடு தக்கலையில் வசிப்பதாகவும் புன்னகையோடு பேச ஆரம்பித்தார், நெடிய உயரமாக உச்சியை சரித்து வகடு எடுத்து சீவியிருந்தார், தான் எண்பதுகளில் எழுத ஆரம்பித்ததாகவும்,ஆரம்பகாலங்களில் கவிதைகள் நிறைய எழுதியதாக கூறினார்।எழுத்தாளர்களின் எழுத்துக்கள் முழுக்க முழுக்க உள்ளத்திலிருந்தும் சிந்தனைகளையும் கலந்து தான் வடிக்கப்படுகிறது பார்த்த உணர்ந்து பாதித்த விசயங்கள், நிகழ்வுகள் எழுத்தில் பிரதிபலிக்கும் என்றார்.எழுத்துக்களை வெகுசன மக்கள் மத்தியில் வெளிப்பரப்பில் படிக்கும் போது பல்வேறு அர்த்தங்களோடு புரிந்துகொள்ளப்படுகிறதுதென்றும்,ஆய்வாளர்களால் இன்னொருவிதமாகக்கூட பகுப்பாய்வு செய்யப்படலாம் என குறிப்பிட்டார்.
தன்னுடைய மயிலாஞ்சி கவிதை தொகுப்பில் தான் எழுதிய நிறைய கவிதைகளை நினைவுகூறினார் ரசூல்.
என்னுடைய மகள் சிறுமியாக பள்ளி சென்று வரும் பருவத்தில் பள்ளியிலிருந்து தனது பள்ளித் தோழியின் ஸ்டிக்கர் பொட்டினை வாங்கி வருவது வழக்கமாம்.அதனை மனதில் வைத்து கவிஞர் ரசூல் ஒரு கவிதை ஒன்றினை படைத்துள்ளார்,சின்னஞ்சிறுமிகளின் உலகில் தனும் சென்று சிறுமிகளைப்போல் சிந்தித்துள்ளார். "பொட்டு வைத்து அழகு பார்க்க எனக்கு ஆசை ஆனால் உம்மா திட்டிடுவார்களோ" என கவிதையில் வரிகளில் குழந்தையின் ஒரு நிறைவேறாத ஆசையினை எழுதியுள்ளார். பின்னர் அது வெகு சன பரப்பில் அந்த கவிதை வரிகள் படிக்கப்பட்டு இவர் முஸ்லிம் பெண்களை பொட்டு வைக்க சொல்கிறார் என அர்த்த படுத்தப்பட்டதாம்.அது போல நபிகள் நாயகத்தை பற்றி சொல்லி கொடுத்தேன். மிகுந்த பக்தியோடு கதைகேட்டு வருகிற சிறுமி தன் தந்தையிடம் ஒரு சந்தேக கேள்வி எழுப்புகிறது "வாப்பா இத்தனை ஆண் நபிகள் தோன்றியுள்ளார்களே ஏன் வாப்பா ஒரு பெண் நபி கூடதோன்றவில்லை" என சிறுமியின் பார்வையோடு அந்த கவிதை எழுதியுள்ளார்,இதுவும் இஸ்லாத்தில் பெண்விடுதலை என இவரின் வரிகளை உருவகப்படுத்தப்பட்டதாம். தந்தை வேலைக்கு போய்விட்டு வீட்டுக்குவருகிறார் வீட்டின் நடுவீட்டில் சின்னஞ்சிறு சிறுமி தனது பொம்மைகளையும், விளையாட்டுப் பொருள்களையும் வைத்து மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருக்கிறாள்அவர் அவற்றை கடந்துபோகும் போது அவரின் காலில் பட்டு மகளின் பொம்மை மிதிபட்டு தூரத்தில் போய் விழுகிறது।இதையும் கவிஞர் சின்னஞ்சிறு குழந்தையாகவே கற்பனை செய்து அந்த பொம்மை சிந்திப்பதுபோல் வரிகளை வடிக்கிறார் "எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால் இதுமாதிரி நான் பிறர் கால்களில் உதைபட்டிருக்கவேண்டியது வந்திருக்காதல்லவா? என இதையும் வெகு சன பரப்பில் கவிஞர் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் என் அர்த்தம் கொள்ளப்பட்டதாம்.பின்னர் மாவட்ட உலாமாக்களிடமிருந்து கவிஞருக்கு பத்வா கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டதாம்.அதன் பின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவரிடமிருந்து மன்னிப்பு கடிதம் எழுதிவாங்கப்பட்டு, மயிலாஞ்சி கவிதை புத்தகங்கள் திரும்ப பெறபட்டதாம். தனது எழுத்துக்களின் மூலம் தனக்கு கிடைத்த அனுபவங்களை சின்ன முகசுழிப்போடு பகிர்ந்துகொண்டர் கவிஞர் ரசூல்.அவர் தனது பேச்சின் போது எழுத்தின் பல தளங்களிலும் பயணித்துவந்தார். உங்களைப் போன்ற இளம் படைப்பாளர்களுக்கு அவரது பேச்சு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது.அவர் மிகவும் கவனமாக பேசினார் "ஊர்விலக்கம்" பற்றி அவர் வாய்திறக்கவே வில்லை.
நெய்தல் படைப்பாளர்களுக்கு ரசூல் அவர்களின் படைப்புகளோடும்,அவரோடும் மிக குறைவான அறிமுகமே இருந்தால் ஊர்விலக்கம் பற்றி அறிய மிகுந்த ஆவலாக காணப்பட்டனர்।படைப்பாளர்களிடையே கலந்துரையாடலின் போது பல கேள்விகளை கேட்டு ரசூலோடு உரையாடினார்கள் இருப்பினும் அவர்களின் இறுதி கேள்வியாக ஊர்விலக்கம் பற்றியதாகவே இருந்தது என்பதை உணரமுடிந்தது,
நீண்டதொரு மவுனம் தொடர்ந்தது கவிஞர் ரசூல் தான் அணிந்திருந்த மூக்குகண்ணாடியை கழற்றி கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு சின்ன செறுமலுடன் பேச தொடர்ந்தார்.உண்மையிலே தான் ஊர்விலக்கம் பற்றி பேச தவிர்ப்பதாக கூறினார்.தன்னுடைய மயிலாஞ்சி தொகுப்பிற்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பின் தான் கவிதை எழுதுவதை தவிர்த்து நிறைய கட்டுரைகள் எழுதியதாக குறிப்பிட்டார். சமீபத்திய தனது கட்டுரை ஒன்றில் திருக்குரானில் குடியை பற்றி என்ன செல்ல பட்டிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறார்,அதாவது இஸ்லாத்தில் குடியை பற்றி பல இடங்களில் செல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கான தண்டனையை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை எழுதியுள்ளார்.ஹராம் என பல செயல்களையும், அதற்கான தண்டனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.மது குடிப்பது விதிவிலக்காக தண்டனைக்குறியதாக திருகுரானில் எங்கும் காணக்கூடியதாக இல்லை என கவிஞர் ரசூல் மிக ஆணித்தரமாக சான்று கூறுகிறார்.
இந்த கட்டுரையும் பத்திரிகை ஒன்றில் பிரசுரமானவுடன் உலாம்களிடையே பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது,தான் சார்ந்திருக்கும் ஐஞ்சுவண்ணம் ஜமாத்திலும் பெரும் சர்ச்சையை கிளப்பி விடப்பட்டுள்ளது.கவிஞரிடம் நேரடியாகவும்,எழுத்து மூலமாகவும் விசாரணை செய்துள்ளனர். அவரும் முறையான அதற்கான விளக்கங்களை அளித்துள்ளார்.அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத ஐஞ்சுவண்ணம் ஜமாத் கவிஞரையும் அவரது குடுபத்தினரையும் ஊர்விலக்கம் செய்துள்ளனர்.ஜமாத்தில் நடைபெறும் எந்த ஒரு நல்லது கெட்ட நிகழ்ச்சியிலும் அவரோ அவரது குடும்பத்தாரோ கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.கவிஞரும் அவரது குடும்பத்தாரும் ஒருவிதமான மனக்குழப்பத்திற்கு ஆழாக்கபட்டுள்ளனர்.
இதையெல்லாம் சட்டப்படி எதிர் கொள்வதென தற்போது இந்தபிரச்சனை வழக்குமன்றத்தில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்।எழுத்தும் எதிர்நீச்சலும் கவிஞரோடு உடன் பிறந்தவையாகும் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் திறன் தனக்குள்ளதாக கூறினார்।தற்போது தனது ஊர் மக்களிடையே தன்னை பற்றிய தனது எழுத்தைப்பற்றிய தெளிவை ஏற்படுத்திருக்கும் விதத்தையும் தெரிவித்தார்।வெகுசன வெளிப்பரப்பில்தனது இந்த கட்டுரையை படித்தவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் தமிழ்கூறும் நல்லுலகின் தழிழ் எழுத்தாளர்கள் கருத்துக்கள்,பகுப்பாய்வாளர்களின் கருத்துக்கள்,கடிதங்கள்,விமர்சனங்கள் போன்றவற்றையெல்லாம் ஒரு தொகுப்பாக வெளீயீடு செய்துள்ளார்கள் .இந்த புத்தகம் படிப்பவர்கள் மத்தியில் தன்னை பற்றிய நல்லதொரு புரிதலை உண்டாக்கியுள்ளதாக கூறி நீண்டதெரு மூச்சுஎடுத்துக்கொண்டார் .

எழுத்தின் மூலம் எதிர்நீச்சல் போடும் கவிஞர் ரசூலின்கரம் பற்றிய நெய்தல் படைப்பாளார்கள் தாங்களும் இந்த எதிர்நீச்சலில் உடனிருப்பதாக கூறி கவிஞரின் கரத்தை இறுக பற்றிக்கொண்டனர்.
Comments