பறவைகளுக்கு ஆபத்து
"தடம்" புகைப்பட ஆர்வலர்களின் அமைப்பில் இந்தமாத அமர்வில் நண்பர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.நாமெல்லாம் சேர்ந்து போய் பறவைகளை படம் எடுக்கலாம் என்றனர்,கூந்தங்குளம் பறவைகள் சரணலயம் போவது எனவும் முடிவானது.
அதிகாலை 5மணிக்கெல்லாம் வேப்பமூடு செல்வம் டீ ஸ்டால் கிட்ட எல்லரும் வந்து சேர்ந்தோம்.எங்க பயணத்திற்கான காரும் ரெடியா இருந்திச்சு,இருள் கவ்விகிடந்தது, அதிக அளவு ஆள் நடமாட்டம் ஆரம்பிக்காத வேளை. ராத்திரி முழுதும் தெருவில் மேய்ந்தும் சுவரில் போஸ்ட்டர் கிழித்தும் தின்ற அசதியில் நடு ரோட்டில ஏழ எட்டு மாடுகள் படுத்து கிடந்து, அதுகள் அசை போடுவதை இருட்டுல பார்க்கும் போது மாடுகள் தங்களுக்குள்ள மவுன மொழியில் பேசிகொள்வது போல இருந்திச்சு.டீ மாஸ்ட்டர் ஜெகனிடம் ஆளுக்கொரு டீயை போட சொன்னோம் அப்போது டமாரன்னு ஒரு பயங்கர சத்தம்.குடவே ம்ம்மாஆ என்ற கதறுலும் கேட்டுச்சு பார்த்தா,ஒரு செவல நிற கண்ணுகுட்டிய கார்கரன் அடிச்சுபோட்டுட்டு வேகமா அந்த கார் இருட்டுல மறஞ்சு போயிருச்சு.ஐயோ மாட்ட அடிச்சுட்டான்னு நாங்க பதறும் போதே அடுத்த கொடுமை எங்க கண்ணுமுன்னாலேயே நடந்திச்சு, தொடர்ந்து வந்த ரெண்டு பஸ்கள் வரிசைய ஒன்றன் பின் ஒன்றாக அந்த கண்ணுகுட்டி மேல ஏறி இறங்கி நசுக்கி சதைச்சு போட்டுட்டு போய்ட்டாங்க.நசுங்கி கூழாகிபோனதால் அதை இழுத்து ஒரு ஓரமாககூட போட இயலாதநிலை எங்களுக்கு, ஒருவித வருத்தத்தோடு பார்வையளர்களாகவே காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினேம். நாகர்கோவில் நகரில் இப்போதெல்லாம் நிறைய மாடுகள் சுற்றி திரிகின்றன ரோடுகளில்,தெருக்களில்,சந்தையில்,பேருந்து நிலையத்தில்,போன்ற ஜனங்கள் புழங்ககூடிய இடங்களில் மாடுகளும் சகஜமாக வலம்வருகிறது.கோமாதா என புனிதமாக வணங்ககூடிய பசுக்கள் பரிதாமாக தெருபறக்குகிறது.சிவன் கோவில்களுக்கு நேர்ச்சையாக மாடுகளை நேர்ந்து இவை விடப்படுவதாகவும் அவைதான் இப்படி ஊர்சுற்றுவதாக விபரம் அறிந்தவர்கள் செல்லுகின்றனர்.எப்படியாயினும் இந்த வாயில்லா ஜிவன்கள் பரிதாபத்திற்கு உரியவையே.
7 மணிகெல்லாம் நாங்கள் கூந்தங்குளம் சேர்ந்துவிட்டோம், அந்த பெரிய குளம் வற்றி போய் கொஞ்சூண்டு தண்ணீர் கிடந்தது.நூற்றுக்கனக்கான செங்கால்நாரைகளும்,கூழக்கிடா பறவைகளும் தண்ணிகுள்ளேயும் கரையிலுமாக இருந்து இறக்கைவிரித்து படபடத்து வரவேற்றது.மேகமூட்டமான வெளிச்சமும்,இதமான குளிர் காற்றும் காதுகளில் ஊழையிட்டது.நாங்க ஆளுக்கொரு திசைகளில் கேமராவேடு பிரிந்து சென்றேம்.பறவைகளின் பிரமான்டமான அணிவகுப்பை லென்சுவழியாக பார்க்க பிரமிப்பாக இருந்தது,சிவந்த நீண்டகால்களை கொண்ட பெயின்டட்ஸ்ட்ரோக் {செங்கால்நாரை}நீண்ட அலகும் மொட்டைதலையில் மஞ்சள்நிறத்தை கொட்டிக்கொண்டது போல காட்சி அளித்தது.அது போலவே பெலிக்கான் {கூழக்கிடா} பறவையும் நீறுக்குள்ளேசிறகை மெல்ல அசைத்து கூட்டமாக வலம்வந்தது.நாங்கள் படம்பிடிக்க எத்தனித்த நகர்வில் பறவைகளிடையே ஒருவித சலசலப்பை உருவாக்கி பறவைகள் கலைந்தது.அவைகள் கலைவதுகூட பறப்பதை படம்பதிவு செய்ய ஏதுவாகதான் இருந்தது,இருப்பினும் மனதுக்குள்ளே நாம் அவைகளை அதன் அமைதியினை தொந்திரவு செய்கின்றேம் என்ற குற்றஉணர்வு தோன்றியது.குளத்தின் கரையில் அமர்ந்திருந்த அந்த ஒரு மணி நேரமும் பறவைகள் தாங்களின் சுதந்திரம் தடைபட்டதாகதான் உணர்ந்திருக்கும்.
குளத்தின் உள்ளே கருவேலமரங்கள் நிறைய பட்டுபோய் கிடந்தது.பறவைகள் நிறைய வலசை சென்றுவிட்டதால் வெத்து பறவை கூடுகளை காணமுடிந்தது.பரந்து விரிந்த அந்த குள்ளத்தின் அருகாமையில் உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்வதை காணமுடிந்தது. இந்த பறவைகள் சரணலயம் வழியாக உயர் அழுத்த மின்சார வயர்கள் பாதை அமைத்திருப்பது மிக மிக ஆபத்தாகும் ஈரக்கால்களோடு உயர எழும்பி பறக்கும் பறவைகள் மின்சார்த்தில் அடிபட நிறைய வாய்ப்பு உள்ளது.குளத்தின் உள்ளே உள்ள கருவேலமரங் காட்டில் ஆங்காங்கே பறவைகள் இறந்துகிடப்பதை பார்க்க முடிந்தது அதன் இறக்கை தூவல்களும் எலும்புகூடுகளும் கண்டோம்.
கூந்தங்குளத்திலிருந்து 20கிமி தொலைவில் தான் கூடங்குளம் அனுமின் நிலையம் அமைந்திருப்பது எதிர்காலத்தில் பறவைகள் வெளிநாட்டிலிருந்து வலசை வருவதை பாதிக்கும் என்பதை நம்மால் உணரமுடிந்தது.
பறவகளை அந்த ஊர் மக்கள் மிகவும் நேசிக்கின்றனர்,பறவைகளும் அந்த ஊரை நேசிக்கின்றன,இதை உணரவேண்டியது அரசு. சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டுகின்ற ஆளும் வர்க்கம் இந்த வாயில்லா ஜிவன்களையும் மனதில் கொண்டு இவற்றுக்கு இடையூரு இல்லாத வகையில் மனிதர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தீட்ட வேண்டும்,இந்த பறவைகள் சரணாலையம் முறையாக பராமரிக்கப்படவேண்டும் குளத்திற்கான நீர்வரத்தும் குறையாத அளவு அதற்கான ஏற்பாடுகளை இனிவரும் காலங்களில் அரசு செய்யவேண்டும், அதுபோல உயர் அழுத்த மின் ஒயர் களுக்கு பிளாஸ்ட்டிக் உறை அமைத்திடல் வேண்டும்.
வெளிநாட்டில்ருந்து வலசை வருவது பறவைகள் மட்டும்மில்லை. அதேடு சேர்ந்து வசந்தமும் சேர்ந்து வந்து நம்மை வாழ்த்தும்.
Comments