கொலைக்குடில்
நதியின் மடி சுரண்டி
மணல் வந்தது
பர்வத உடல்சிதைத்து
கல் வந்தது
வனம் அறுத்து
கதவும் ஜன்னலும் வந்தது
புவித்தாயின் மார்பில்
துளையிட்டு உறுஞ்சியதில்
நீர் வந்தது
வாஸ்து பார்த்து
வானம் தோண்டி
இறந்து போன
இயற்கையின் உடல் அடுக்கி
விண்முட்டும் உயரத்தில்
என் புது வீடு
அத்தனையும் அழித்த
களைப்பில் நான்
வீழ்ந்து கிடக்கின்றேன்
நடு வீட்டில் பளிங்குகல் மீது
வாசலில் கட்டிய மாவிலை
நகைக்கிறது என்னை பார்த்து
Comments