மெனக்கெடு1
வனம்போயி அறுத்தெடுத்து
ஓடாவி2 செதுக்கி தந்த கடல் தேரு
பெருமடியை 3 சுமந்த மரமிது
ஓங்கார காற்றையும் உறப்பான 4 கடலையும்
கிழித்து பாயும் மரமிதுஇது
ஒடாத கடலுமில்லை
பார்க்காத சேலுமில்லை5
மீன்களையும் மீனவனின்வாழ்வு தனையும்
சுமந்து வரும்கட்டுமரம்
மிதந்து மிதந்து களைச்சு போச்சு
மிதந்து மிதந்து களைச்சு போச்சு
இன்றுஇதற்கு ஓய்வு நாளாம்
மெனக்கெடு1 = ஓய்வு நாள்
ஓடாவி2 = கட்டு மரம் செய்பவர்
பெருமடியை३ = பெரிய வலை
உறப்பான4 = வேகம்
சேலுமில்லை5 = நீரோட்டம், காற்றின் போக்கு
Comments