விட்டாச்சு லீவு
பெரிய லீவும் விட்டு
பள்ளிகூட பெரிய கேட்டில்
பெரிய பூட்டும் போட்டாச்சு
புத்தகமும் கிழிஞ்சு போயி
கிழங்கு காரன் கொண்டு போனான்
பகல் வெயிலும் எங்களோடு
மகிழ்ச்சியாக கடல்குளிக்கும்
தக்கைமரம் சேர்த்துகெட்டி
மரம் இளக்கி1 விளையாட்டு
கடமரமும்2 தேவையில்லை
அணியமும் 3 தேவையில்லை
கம்பாலும்4 தேவையில்லை
சேப்பு வைக்க5 தேவையில்லை
பாய்விரிக்க தேவையில்லை
யாத்தினமும்6 தேவையில்லை
ஒமலுகூட7 தேவையில்லை
சேக்காளி8 நீங்க மட்டும்கைகோத்து
வந்தாலே போதுமடா
அலை மடிப்பில் தாவிகுதித்து
தலையெல்லாம் மணலாச்சு
அலைக்கரையில் கிளிஞ்சல்
பொறுக்கிமாலையாக கோர்த்திடுவோம்
பொழுதடைய கடல்குளிச்சு
வீட்டுமுத்தம் மிதித்திடுவேம.
மரம் இளக்கி1 =கட்டுமரத்தை கடலில் இறக்குவது
கடமரமும்2 =கட்டுமரத்தின் பின்புறம்
அணியமும்३ =கட்டுமரத்தின் முன்புறம்
கம்பாலும4 = கயறு அல்லது வடம்
சேப்பு வைக்க5 = மரத்தை சேர்த்து கட்டுவது
யாத்தினமு6 = தொழில் கருவிகள்
ஒமலுகூட7 = பொட்டி பொரிய கடவம்
சேக்காளி8 = நண்பர்கள்
Comments