கரை மடி
குமரி மாவட்ட கடற்கரையோரங்களில் நடைபெறும் மீன்பிடித் தொழிலின் ஒரு வகை தொழில்நுட்பமாகும் கரை மடி என்பது.
வெள்ளன விடியல் பொழுதிலேயே கடற்கரையில் மீனவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கடற் பகுதியை கண்காணிப்பார்கள்। கடலின் நீரோட்டம் மற்றும் காற்றின் போக்கை கணித்து கொண்டிருப்பார்கள். கடலின் மேற்பரப்பில் மீன்களின் நடமாட்டத்தை கடலின் நிறம் மாற்றத்தின் மூலமாக அறிந்து கொள்வார்கள்.மீன்களின் வரத்து அதிகம் வந்தவுடன், படகில் வலையேடு சிலர் ஏறி கொள்வார்கள் வலையின் ஒரு முனையை கரையில் நிற்பவர்களிடம் கொடுத்துக்கொண்டு வலையை கடலில் விரித்தவாரே ஒரு நீள் வட்ட வடிவமாக படகை செலுத்தி வலையின் மறுமுனைகளை கடற்கரையில் நிற்கும் மற்றவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். வலையின் இரு முனை பக்கங்களிலும் நீண்ட கயிறுகளால் இணைக்கபட்டிருக்கும் முனைகளின் பக்கத்திற்கு சுமார் 25 மீனவர்கள் வீதம் சேர்ந்து நின்று வலையை ஒரே முகமாக புஜவலிமையால் ஒருசேர இழுப்பார்கள். கடலில் விரிக்கபட்ட வலையானது அதில் அகப்பட்ட மீன்களோடு வளைந்து கரையை நோக்கி வந்து கொண்டே இருக்கும்.பொதுவாக இந்த கரைமடி கடற்கரையில் செய்யபடுகிறது.இதில் அதிகபடியான மீன்கள் படுவதில்லை சாளை,மத்தி, வாளை, நெத்தலி,விளைமீன்.வேளாமீன் போன்ற மீன்கள் படுகின்றன.
இந்த கரைமடியில் விரிக்கபடுகின்ற எல்லா வலைகளிலும் மீன்கள் கிடைப்பதில்லை பல மணிநேர வேலையும் உடல் உழைப்பும் வெறுதாய் போவதும் உண்டு இவர்களுக்கு.
கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15 ம் தேதியிலிருந்து 45 நாட்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித்தல் தடை செய்ய பட்டுள்ளது. இந்த 45 நாட்கள் மீன்கள் இனவிருத்தி காலமாகும். இந்த படங்கள் சமீபத்தில் கொட்டில்பாடு என்ற கடற்கரை கிராமத்தில் பதிவு செய்ததாகும்.
Comments