எழுத்தும் எதிர்நீச்சலும்
நாகர்கோவில் கார்மல் பள்ளி வாளாகத்தில் உள்ள மாதா கெபியின் முன் ஒரு பெரிய கொன்றை மரம் கிளைவிரித்து படர்ந்து கிடந்தது சித்திரை மாதம் தொடங்கிவிட்டது என்பதின் அடையாளமாக அந்த மரம் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து தொங்கியது. உதிர்ந்த பூக்களின் இதழ்களால் அந்த இடம் முழுவதும் மஞ்சள் கம்பளம் விரித்தது போன்றிருந்தது.பொழுது சாய்ந்து மாலை இருக்க ஆரம்பித்தது. நெய்தல் படைப்பாளர்கள் கொன்றையின் அடியில் காத்திருந்தோம். அன்று சிறப்பு விருந்தினராக வரயிருப்பது எழுத்தின் மூலம் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் எழுத்தாளர் கவிஞர் ஹச். ரசூல் ஆவார். கவிஞர் ரசூல் குறித்த நேரத்தில் வந்து சேர, நெய்தல் படைப்பாளர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது. நாங்கள் குழுமி இருந்த அறையில் மின்தடை படவே அறையின் வெளியில் இயற்கை சூழ்நிலையில் மரநிழலில் கூட்டம் தொடங்கியது. நாங்கள் சுமார் 15 பேர்கள் குழுமியிருந்தோம்.சிறப்பு விருந்தினர் அறிமுகமும், அதை தொடர்ந்து பங்கேற்ப்பாளர்கள் அறிமுகமும் நடந்தேறியது.கவிஞரின் படைப்புகளை பற்றியும்,எழுத்தின் நடையையும் அதன் வீரிய...