அலைகடலொரம் தொடரும் துயரம் ...4
குமரி மாவட்டத்தில் சுனாமி ஏற்படித்திய தாக்கதினல் ஏற்பட்ட உயிர் இழப்பு உடமைகள் சேதம், உருக்குலைந்து போன மீனவ மக்களின்வாழ்க்கை என அத்தனையும் மறக்க முடியாத வடுக்கள். அதன் பின்பு நிவாரணங்கள், புணரமைப்புகள், தொழில் முனைவுகள், மற்றும் கடல் பற்றிய மனதளவில் மீனவ சமுகத்திடம் ஏற்ப்பட்டிருன்த ஒரு வித பய உணர்வு மனதை விட்டு அகன்று வரும் இந்த வேளையில் தற்போது பயன்க்கர கடல் கொந்தளிப்பும், சூறாவளி காற்றூம் ஏற்பட்டுள்ள்து. மாவட்டதின் பல கடலோர கிரர்மங்களின் அழகிய கடற்கரைகள் அத்தனையும் அசூர அலைகளின் தாக்கத்தால் சீரழிந்து போயுள்ளது. கடற்கரை வீடுகள் பல அலையால் பெயர்த்து எடுக்கபட்டு அழிந்து போயுள்ளது . இந்த இயற்கை சீற்றம் மீனவ சமூகத்தில் கடற்கரையில் வசிப்பதில் ஒரு வித பய உணர்வும், பீதியும் ஏற்படித்தியுள்ளது. உயிர் பாதுகாப்பு இல்லாத சூழ்னிலை உருவாகியுள்ளது. இது போன்ற இயற்கை சீற்றன்களால் கடலையும், கடற்கரையும்,மீனையும் நம்பி வாழ்கின்ற இவர்களது வாழ்வு கேள்வி குறியாக உள்ளது.
Comments