கவிதைகள்

விடியல்

இரவு முழுவதும்
கடல் மடியில்
உறங்கி துயில்
எழும்பும் சூரியன்.
...........................................................................
ஆம்லெட்

உலகம் முழுவதும்
தினந்தோறும் நடைபெறும்
சத்தான
கருக்கலைப்பு.
...........................................................................

சிகரெட்

விரலிடிக்கில்
புகையும் பணம்.
...........................................................................

கேமரா

எனது எண்ண்க் கனவுகளை
அவ்வப்போது நனவுகளாக்கும்
மந்திரப்பெட்டகம்...
வாழ்வின் அடிததளத்தை
உருவாக்கி விட்ட பொக்கிஷம்...
இலக்கு இன்றி திரிந்த எனக்கு
இலட்சியம் ஏற்படுத்தி
இலட்சஙகள் ஈட்டுக் கொடுத்து
வாழ வழி காட்டிய
மந்திரப் பெட்டகம்...
வாழ்வில் புதிய புதிய
பரிமாணக் கோணங்களை
காண்பித்துக் கொடுத்த
வியூபைண்டரும் உண்டு...
எனது தோளில்
தொங்கி கிடந்தே
வாழ்வில் எனது
இரு புஜங்களையும்
உயர்த்திவிட்ட மந்திரப்பெட்டகம்...
உடல் உண்டு...
கண் உண்டு...
வாய் இல்லை...
ஆனாலும்! என்னிடம்
அடிக்கடி வாய் திறந்து பேசும்
"கிளிக் கிளிக்" என்று...
...........................................................................

Comments